அமெரிக்காவில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் 126 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் தீ பிடித்து கொண்டது. லேண்டிங் கியர் பழுதான காரணத்தால் தீ பிடித்து கொண்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.






டொமினிக்கன் குடியரசு சாண்டோ டொமிங்கோவிலிருந்து கிளம்பிய விமானம் மியாமியில் தரையிறங்கும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என விமான போக்குவரத்து துறை செய்தி தொடர்பாளர் கிரெக் சின் தெரிவித்துள்ளார். 






இதில், மூன்று பேருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள், விபத்து நடைபெற்ற பகுதியிலிருந்து முனையத்திற்கு வாகனத்தின் மூலம அழைத்து செல்லப்பட்டனர். 






சம்பவம் நடந்த போது விமானம் சான்டோ டொமிங்கோவில் இருந்து மாலை 5.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. ஓடுபாதையின் ஓரத்தில் உள்ள புல்வெளி பகுதிக்கு அருகே விமானம் வந்து நின்றது. தீ விபத்து காரணமாக சில விமானங்கள் தாமதமாக வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண