அமெரிக்கா டல்லாஸ் நகரில் பெண் தோழியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக 38.85 கோடி ரூபாய் மதிப்புள்ள கலை அருங்காட்சியகத்தை காதலர் ஒருவர் சேதப்படுத்தியுள்ளார். அவரின் பெயர் பிரையன் ஹெர்னாண்டஸ் என்பது தெரியவந்துள்ளது. புதன்கிழமை இரவு,  டல்லாஸ் கலை அருங்காட்சியகத்தை அவர் சேதப்படுத்தியுள்ளார். அவர் சேதப்படுத்தும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 


இரவு 9:40 மணி அளவில் அருங்காட்சியகத்திற்கு வெளியே கையில் இரும்பு நாற்காலியுடன் அவர் இருப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பின்னர்,  அருங்காட்சியகத்திற்கு உள்ளே நுழைந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பொருள்களை அவர் சேதப்படுத்தியுள்ளார். 




இதுகுறித்து  டல்லாஸ் காவல்துறை பதிவு செய்த குற்றபத்திரிகையில், "பிரையன் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் சென்று காட்சி பெட்டிகளை சேதப்படுத்தி அதற்கு உள்ளே இருந்த பொருட்களையும் உடைத்தார். முதலில் பெட்டிகளை கையால் உடைத்த அவர், பின்னர் அதை இரும்பு நாற்காலியை கொண்டு நொறுக்கினார்.


ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க ஆம்போரா ஜாடிகள் மற்றும் கிமு 450 க்கு முந்தைய பானை உட்பட இரண்டு மதிப்புமிக்க பொருட்களை கூட அவர் விட்டு வைக்கவில்லை. இந்த இரண்டு பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 5 மில்லியன் டாலர்கள் எனக் கூறப்படுகிறது. 100,000 டாலர்கள் மதிப்புள்ள கைலிக்ஸ் ஹெராக்கிள்ஸ் மற்றும் நிமியோன் சிங்க சிலைகளையும் அவர் சேதப்படுத்தியுள்ளார். 10,000 டாலர்கள் மதிப்புள்ள பாட்டா கூஹூ முதலை மீன் சிலையையும் அடித்து நொறுக்கினார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.




இதையும் படிக்க: முக்கிய நகரங்களுக்கு குறி...தற்கொலை படை தாக்குதல்...மிரட்டல் விடுத்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு


அழிக்கப்பட்ட பொருட்கள் மிகவும் விலையுயர்ந்த ஒரு வகையான அரிய பழங்கால கலைப்பொருட்கள் என காவல்துறையினர் கூறியுள்ளனர். மடிக்கணினி, மானிட்டர், தொலைபேசி, நான்கு காட்சி பெட்டிகள் மற்றும் இரண்டு மரக் காட்சி பலகைகளையும் அவர் அடித்து நொறுக்கினார். 


பின்னர், பாதுகாப்பு அலுவலர்கள் அவரை பிடித்தனர். அப்போது, காதலியின் மீதான கோபத்தின் காரணமாக இதை செய்ததாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் பிரையன் வாக்குமூலம் அளித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண