தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி ஒன்றில் வீரர் ஒருவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நேற்று முன் தினம் இரவு ஆஃப்பிரிக்காவின் குத்துச்சண்டை சம்மளேனம் சார்பில் லைட்வெயிட் பிரிவு குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட்டது. 


இதில் சிம்சோ புல்தேசி மற்றும் சிப்சேஹில் ஆகியோர் மோதினர். 10 சுற்றுகள் கொண்ட போட்டியில் இரு வீரர்களும் சமமாக சண்டை செய்தனர். இந்தப் போட்டியின் கடைசி சுற்றின் போது திடீரென்று சிம்சோ புல்தேசி சக வீரரை பார்த்து சண்டை இடாமல் திரும்பி சண்டையிட்டார். அப்போது அவரை நடுவர் தடுத்து பார்த்த போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 


 






இந்தச் சம்பவத்திற்கு பிறகு புல்தேசியை அங்கு இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு இந்தச் சண்டைக்கு முன்பாக தலையில் காயம் எதுவும் ஏற்பட்டிருந்ததா என்பது தொடர்பாக மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அத்துடன் அவருடைய மூளையில் ரத்தம் கட்டியிருக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


 






குத்துச்சண்டை போட்டியின் போது வீரர் ஒருவர் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை புல்தேசி கோமாவில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் விரைவில் குணம் அடைந்து நல்ல படியாக வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் தங்களுடைய பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண