முகமது நபி குறித்து பாஜக நிர்வாகிகள் சர்ச்சை கருத்து தெரிவித்த நிலையில், இதை காரணம் காட்டி இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.


இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், முகமது நபியின் கண்ணியத்தை காக்கும் வகையில் போராடுவதற்கு குஜராத், உத்தரப் பிரதேசம், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் தங்களை தானே வெடிக்க வைப்பதற்கு தயாராக இருக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


"டெல்லி, மும்பை, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய இடங்களில் உள்ள காவி பயங்கரவாதிகள் இறுதி மூச்சை விடுவதற்கு  காத்திருங்கள். தங்களது வீடுகளிலும் ராணுவ தளங்களில் கூட அவர்களால் அடைக்கலம் தேட முடியாது. எங்களின் அன்புமிக்க முகமது நபிக்காக பழிவாங்கவில்லை என்றால் எங்கள் தாய்மார்கள் துக்கமடைவார்கள். 


நம் நபியை அவமதிப்பவர்களைக் கொன்று விடுவோம். நபியை அவமதிக்கத் துணிபவர்களின் பட்டாளத்தைத் தகர்க்க எங்கள் உடலிலும், நம் குழந்தைகளின் உடலிலும் வெடிகளைக் கட்டுவோம். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது. எந்த விதமான பாதுகாப்பும் அவர்களை காப்பாற்றாது. இதற்கு எந்த விதமான கண்டனமோ துக்கமோ தெரிவித்தால் கூட இப்பிரச்னைக்கு  தீர்வு  எட்டப்படாது.


இந்தியா முழுவதும் இந்துத்துவா பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ளனர். நபியின் கண்ணியத்திற்காகப் போராடுவோம். அவரின் கண்ணியத்திற்காகப் போராடி இறக்கும்படி மற்றவர்களை வலியுறுத்துகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபூர் சர்மா, நவீன் குமார் ஆகியோர் முகமுது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரெபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவுகள், லிப்யா, இந்தோனேசியா ஆகிய 15 நாடுகள் இந்திய அரசுக்கு எதிராக தங்களது அதிகாரப்பூர்வ எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.


இதற்கு மத்தியில், விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "கூறப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் எந்த விதத்திலும் இந்திய அரசின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை. அவை, குறிப்பிட்ட ஒரு கும்பலின் கருத்து மட்டுமே" என தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில், இரண்டு செய்தி தொடர்பாளர்களையும் பாஜக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண