அமெரிக்க F-16 போர் விமானம் தென் கொரியாவில் இன்று (டிசம்பர் 11) பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. ஆனால் அதில் இருந்த விமானி அவசரகால வழிமுறை பின்பற்றி தப்பியதாக (emergency escape / ejection) தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று தென் கொரியாவில் இருக்கும் சியோல் நகரம் அருகே சுமார் 178 கிலோமீட்டர் தொலைவில் அமெரிக்காவின் f-16 போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அதில் இருந்த விமானி துரிதமாக செயல்பட்டு விமானத்தில் இருக்கும் eject ஆப்ஷனை பயன்படுத்தி தப்பித்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த விமானம் அப்பகுதியில் இருந்த ஆற்றில் விழுந்து நொறிங்கியது. அமெரிக்க விமானம்ப்படை தளம் அருகே இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சியோல் நகரத்தில் இருக்கும் மஞ்சள் ஆற்றில் இந்த போர் விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விமானத்தில் இருந்து துரிதமாக தப்பித்த விமானி பின்னர் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தென் கொரியா பாதுகாப்புத் துறை அமைச்சர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தெற்கு பகுதியில் இருக்கும் அமெரிக்க வீரர்களை மேற்பார்வையிடும் கொரியா அமெரிக்க படைத்தளம் இந்த செய்தியை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை.  இதேபோல் மே மாதம் அமெரிக்காவின் f16 போர் விமானம் சியோல் நகரத்தில் பயிற்சி மேற்கொண்ட போது இயந்திர கோளாறு ஏற்பட்டு கட்டுப்பாட்டை இழந்தது. அந்த விமானத்தில் இருந்த விமானி அவசரகால வழிமுறையை பயன்படுத்தி உயிர் தப்பினார். கட்டுப்பாட்டை இழந்த விமானம் அருகில் இருந்த விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.  தென் கொரியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு ரீதியாக கூட்டு நாடாகும்.


தென் கொரியாவில் அமெரிக்காவை சேர்ந்த 28,500 ராணுவ வீரர்கள் உள்ளனர். அனு ஆயுதம் கொண்ட வட கொரியாவிடம் இருந்து தென் கொரியாவை பாதுகாக்க அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அண்டை நாடான ஜப்பானில், எட்டு அமெரிக்க விமானப்படை வீரர்கள் இதேபோல் விமான விபத்தில் உயிரிழந்தனர். இதனை தொடந்து அமெரிக்க ராணுவம் கடந்த வாரம் V-22 Osprey டில்ட்-ரோட்டர் விமானம் தரையிறக்க கடற்படையில் இருக்கும் கப்பல் தளத்தை அறிமுகப்படுத்தியது.