அமெரிக்காவில், சட்டவிரோதமாக குடியேறியதாக, ஏற்கனவே 104 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மேலும் 119 பேரை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் , இன்று இரவு 10 மணியளவில் பஞ்சாப் மாநிலம் அமிர்சதசரசில் தரையிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏன் குஜராத்தில் தரையிறங்காமல், பஞ்சாப்பில் தரையிறங்க அனுமதிக்கபப்டுகிறது, எங்களை அவமானப்படுத்துகிறீர்களா என்று பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு கடத்தப்படும் 119 இந்தியர்கள்

அமெரிக்கா கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி, 104 இந்தியர்களை சி-17 ராணுவ விமானம் இந்தியாவுக்கு அனுப்பிய நிலையில், அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான தளத்தில் தரையிறங்கியது.

இந்நிலையில், மீண்டும் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 119 இந்தியர்களை ஏற்றி வரும் இரண்டாவது விமானம் சனிக்கிழமை அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது. 119 இந்தியர்களில் 67 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள், 33 பேர் அரியானாவை சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கோவா, மராட்டியம் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தலா 2 பேர், இமாசலபிரதேசம் மற்றும் காஷ்மீரை சேர்ந்த தலா ஒருவரும் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியர்களை ஏற்றிச் வரும் மற்றொரு விமானம் பிப்ரவரி 16ஆம் தேதி வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்டுப்பாடுகள் இருக்காது?

ஆனால் முதல் விமானத்தில் இருந்ததைப் போலல்லாமல்,  நாடு கடத்தப்படும் இந்தியர்கள் கட்டுப்பாடுகளுடன் ( கை-கால் கட்டப்பட்டு ) அனுப்பப்பட மாட்டார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டவர்கள்  விதம் குறித்து நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம்சாட்டினர் . இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர், இந்த விவகாரத்தை அமெரிக்க அரசிடம் எழுப்புவதாக உறுதியளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது சட்டவிரோத குடியேற்றம் குறித்த பிரச்சினையும் விவாதிக்கப்பட்டது, அங்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்று ,நள்ளிரவில் அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நாடு கடத்தப்பட்டவர்கள் அமெரிக்க விமானம் மூலம் கொண்டு அனுப்பப்பட்டுள்ளனரா அல்லது அவர்கள் திரும்புவதற்கு இந்திய அரசாங்கம் விமானத்தை ஏற்பாடு செய்ததா என்பது இன்னும் உறுதிப்படத்தப்படவில்லை. 

பஞ்சாப் முதல்வர்:

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் தெரிவிக்கயில் "சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாகக் கூறப்படும் இந்தியக் குடிமக்களைச் ஏற்றி வரும் இரண்டாவது விமானம்  அமிர்தசரஸில் தரையிறங்குகிறது. அமிர்தசரஸ் விமான தளத்தில் தரையிறக்க, ஏன் என்பதை வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்க வேண்டும். பஞ்சாப்பை அவமதிக்க அமிர்தசரஸைத் தேர்ந்தெடுக்கப்பட்டதா, குஜராத் மாநிலத்தவர்களும் உள்ளனர். குஜராத்திலும் தரையிறக்கலாமே என்றும் மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன்.