Liberia Petrol Tanker: லிப்ரியாவில் கவிழ்ந்த டேங்கரில் இருந்து பொதுமக்கள் பெட்ரோலை திருடியபோது, ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


கவிழ்ந்த பெட்ரோல் டேங்க்:


லைபீரியாவில் கவிழ்ந்த வாகனத்தில் இருந்து பெட்ரோலை மக்கள் திருட முயன்றபோது கவிழ்ந்த எரிபொருள் டேங்கர் வெடித்தது. இந்த பயங்கர சம்பவம் வெடித்ததில் இருந்து தப்பி ஓட முயன்ற பலரது உடலில் தீப்பிடித்தது. கவிழ்ந்த வாகனத்தில் இருந்து எரிபொருளை எடுக்க மக்கள் அந்த இடத்திற்கு விரைந்த போது டேங்கர் தீப்பிடித்து எரிவதை வீடியோ காட்டுகிறது. சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து எரிபொருளை சேகரிக்க கொள்கலன்களுடன் குவிந்தனர். அவர்களில் சிலர் வாகனத்தின் மீது ஏறியபோது டேங்கர் தீப்பிடித்து வெடித்தது.






40 பேர் பலி:


தலைநகர் மன்ரோவியாவிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர்கள் (80 மைல்) தொலைவில் உள்ள டோட்டோடா நகரில் உள்ள சாலையில் டேங்கர் கவிழ்ந்தது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 83 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வீடியோவில், சாலையோரத்தில் இருந்த புல்வெளியில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து எரிபொருள் கசிந்து கொட்டியது. இதைகண்ட அப்பகுதி மக்கள் கலன்களை கொண்டு பெட்ரோலை எடுத்துச் செல்வதில் மும்முரம் காட்டினர். சிலர் வாகனத்தின் மீது ஏறி நின்றும் எரிபொருளை சேகரித்தனர். சிலர் டேங்கரின் மிது ஸ்க்ரூடிரைவர்களை பயன்படுத்தி துளைகளையிட்டனர். இதனால் ஏற்பட்ட உராய்வால் டேங்கர் லாரி திடீரென  வெடித்து சிதறியது. இதைகண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு தப்பித்து ஓடினர். எரிபொருள் சிதறியதில் அங்கிருந்த புல்வெளியில் பல இடங்கள் தீப்பிடித்து எரிந்தன. தப்பி ஓடிய மக்கள் சிலர் மீதும் தீப்பறியது. இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லைபீரியா உலகின் பத்தாவது ஏழை நாடாகும், அதன் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பெரும்பாலும் மோசமான வறுமையில் வாழ்கின்றனர்.