உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், போரில் கொல்லப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்திலும், ஒருவேளை இதில் குழந்தைத் தப்பித்துவிட்டால் காப்பாற்ற நினைப்போருக்குத் தகவலாக இருக்கும் என்ற எண்ணத்திலும், தனது குழந்தையின் முதுகில் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களை தாய் ஒருவர் எழுதியுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஒரு மாதக்காலத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் தவித்து வருகின்றனர். இருந்தப்போதும் ரஷ்யா தன்னுடைய தாக்குதலை நிறுத்தியப்பாடில்லை. குறிப்பாக உக்ரைன் நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யாவின் தாக்குதலினால் மோசமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிவ் பகுதியில் உள்ள அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட பல லட்சக்கணக்கான மக்கள் போரில் மாண்டுள்ளனர். இந்தப்போரில் ஆண்கள், பெண்கள் மட்டுமில்லாது குழந்தைகளும் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த போர்த்தாக்குலால் 97 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அதிர்ச்சிகரத் தகவலை வெளியிட்டுள்ளார்.  இத்தகவல் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில் தான், தொடர்ந்து முன்னேறி வரும் ரஷ்யப் படைகளால் தாங்கள் கொல்லப்படுவோம் என்று அச்சம் உக்ரைனில் உள்ள குடும்பத்தினடரிடம் அதிகளவில் எழுந்துள்ளது. ஒரு வேளை இந்த ரஷ்யா நடத்தும் கொடூர தாக்குதலில் உயிரிழக்க நேரிட்டால், பிஞ்சுக்குழந்தைகள் என்ன செய்வார்கள்? யார் இதற்கு உதவிக்கரணம் நீட்டுவார்கள் என்ற கேள்வி அதிகளவில் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.





இதன் காரணமாக குழந்தைகளின் உடலில் குடும்ப விபரங்கள் மற்றும் குழந்தையின் பெயர் போன்ற அடிப்படை விவரங்களை எழுதியுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. “குழந்தையின் தாய் சாஷா மகோவி  அவருடைய பதிவில், ஒரு வேளை போரில் நாங்கள் உயிரிழந்தால், குழந்தையை யாராவது காப்பாற்றுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோடு மட்டுமின்றி 2 வயது குழந்தையின் முதுகில் எப்படி பச்சைக்குத்துவது என்பதற்காக அதனை மேற்கொள்ளவில்லை என்ற குறிப்பிட்டுள்ள தகவல் காண்போரின் இதயத்தை நொருங்கச்செய்துள்ளது.


 






இந்த பதிவை சோசியல் மீடியாவில் பார்த்த பலரும் இது மிகவும் வேதனையான செயல்.. எப்போது போர் முற்றுப்புள்ளிக்கு வருமோ? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.  குறிப்பாக குழந்தைகள் தப்பிச் செல்ல முயற்சிக்கும்போது ரஷ்யப் படைகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.