இசைத்துறையில் சிறப்பாக செயல்படும் கலைஞர்களுக்கு, அவர்களை அங்கீகரிக்கும் வகையில், கிராமி விருதுகள் வழங்கப்படும்.


மிகவும் உயரிய விருதாக கருதப்படும் 64-வது கிராமி விருது வழங்கும் விழா, நேற்று லாஸ் வேகாஸில் நடைபெற்றது. அதில், ஃபால்குனி ஷாவின், ‘ஏ கலர்ஃபுல் வேர்ல்டு’ இசை, சிறந்த குழந்தைகளுக்கான ஆல்பம் பிரிவில் விருது வழங்கப்பட்டது.


நியூயார்க்கில் வசித்து வரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான ஃபால்குனி ஷா, முதல் முறையாக கிராமி விருது வென்று சாதனை படைத்துள்ளார்.






கிராமி விருது வென்றது குறித்து தனது இன்ஸ்டாகிராமில், "இன்று நடந்த மேஜிக்கை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. 'எ கலர்ஃபுல் வேர்ல்டு' ஆல்பத்தில் பணியாற்றிய சிறந்த கலைஞர்களின் சார்பாக இந்த விருதை வீட்டிற்கு எடுத்துச் செல்வதில் பெருமை கொள்கிறேன். இந்த மகத்தான அங்கீகாரத்திற்காக, ரெக்கார்டிங் அகாடமிக்கு நன்றி கூறுகிறோம். நன்றி!" என்று பதிவிட்டிருந்தார்.


 






கிராமி வென்ற ஃபால்குனி ஷாவிற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், “கிராமி விருது வெற்றிருக்கும் ஃபால்குனிக்கு வாழ்த்துகள். மேலும், சிறப்பாக செயல்படுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



யார் இந்த ஃபால்குனி ஷா:


 மும்பையில் பிறந்தவரான ஃபால்குனி ஷா, தனது சிறுவயதில் ஜெய்ப்பூர் ஹரானா என்ற பாராம்பரிய இந்துஸ்தானி இசையை கற்றார். பின்னர், பிரபல பாடகர் மற்றும் சாரங்கி இசைக்கலைஞரான உஸ்தாத் சுல்தான் கான் மற்றும் இசைக்கலைஞர் கிசோரி ஆம்னகார் ஆகியோரிடம் பாடல் மற்றும் சாரங்கியை நன்கு கற்றுக் கொண்டார் ஃபால்குனி.


இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்ற அவர்,  போஸ்டன் நகரில் இயங்கிவந்த இந்தோ - அமெரிக்கன் இசைக்குழுவான கரிஷ்மாவில் தன் திறைமையால் முக்கிய பாடகியாக ஃபால்குனி ஷா மாறினார். பின்னர்,நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தவர், சொந்தமாக இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார். இதன் மூலம் நியூயார்க் நகரம் முழுவதும் பல்வேறு இசைநிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்


ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் பாடியுள்ளார். உலக புகழ் பெற்ற  டைம்ஸ் இதழின் 100 காலா பிரபலங்கள் 2009 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்று சாதனை படைத்தார்.


மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க சென்றிருந்தபோது, பாராக் ஒபாமா அதிகபராக இருந்தபோது வெள்ளை  மாளிகையில், மன்மோகன் சிங் உடன் நடந்த இரவு விருந்திற்கு ஏ.ஆர்.ரகுமானுடன் இவரும் பங்கேற்பதற்கு அழைக்கப்பட்டார்.


எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையின் 2015 ஆன் ஆண்டிற்கான உலக அளவில், இந்தியாவைச் சேர்ந்த 20 இன்ஃப்ளூயன்சியல் பெண்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.


மும்பையில், வுமென் ஐகான் ஆப் தி இந்தியா என்ற விருதினையும் வென்றுள்ளார்.