பிரபல ராப் பாடகர் கூனிவ் மார்ச் 18 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஹிப்-ஹாப் ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள் ஆக்கியது. அது நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வாஷிங்டன் டிசியில் உள்ள பிளிஸ் நைட் கிளப் என்று அழைக்கப்படும் இரவுநேர கேளிக்கை விடுதியில் ஸ்டேஜில் அவரது சடலம் நிமிர்ந்து நிற்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மறைந்த ராப் இசைக் கலைஞர் கூனிவின் ரசிகர்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விடியோவை கண்டு ஏற்பட்ட அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேரிலாண்ட்டை சேர்ந்த ராப்பர் 2017 இல் சக கலைஞரான லில் டியூடுடன் இணைந்து ஒரு பாடலை வெளியிட்ட பிறகு இசைத் துறையில் தனக்கென ஒரு தனிப் பெயரைப் பெற்றார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, ஹூட்ரிச் பாப்லோ ஜுவானுடன் சேர்ந்து ஒரு இசை ஆல்பம் செய்தார். அவர் பிக் 64, கூன்விக் 2 மற்றும் ஹே ஆன்ட்டி உள்ளிட்ட பல ராப் பாடல்களை வெளியிட்டிருக்கிறார். அவரது முதல் தனிப்பட்ட ஆல்பமான ஸ்டில் சர்வின் 2019 இல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






பிக் விசில் என்றும் அழைக்கப்படும் கூனிவ், மேரிலாந்தின் டிஸ்ட்ரிக்ட் ஹைட்ஸ் என்ற இடத்தில் கடந்த மாதம் 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு பிறகு துப்பாக்கியால் யாரோ கொல்ல முயற்சித்தது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த சர்ச்சையான வீடியோவில், ராப்பர் ஒரு ஜோடி கிழிந்த ஜீன்ஸ் அணிந்து, அதில் தீப்பிழம்பு இருப்பது போன்று வடிவமைப்பு கொண்டு, அதற்கு மேல் 'AMIRI' என்று எழுதப்பட்ட ஸ்வெட்ஷர்ட் அணிந்து ஸ்டேஜில் நிற்கிறார். அவருடைய உடம்பில், சன் கிளாஸ், ஒரு நெக்லஸ், ஒரு கிரீடம், ஒரு கடிகாரம் மற்றும் ஒரு ஜோடி ஹை-டாப் ஸ்னீக்கர்கள் ஆகியவையும் அணிந்திருந்தார். அந்த கேளிக்கை விடுதிக்கு வந்தவர்கள் அந்த உடல் ஸ்டேஜில் நிற்கும்போதே பின்னால் ஓடும் பாடல்களை கேட்டுக்கொண்டு, நடனம் ஆடிக்கொண்டு இருப்பது விடியோவில் தெரிகிறது. அங்கு சூழ்ந்திருப்பவர்களுக்கு அந்த உடல் அங்கு நிற்பது ஒரு பிரச்சனையாக தெரியவில்லை என்பது விடியோவில் தெளிவாகிறது.






ஆனால், இந்த விடியோவை சமூக வலைதளங்களில் கண்டவர்களால் பொறுக்க முடியவில்லை. ஸ்டேஜில் ஒரு பிராபர்டி போன்று அவரது உடலை வைத்திருப்பது அவருக்கு செய்யும் தகுந்த மரியாதை அல்ல, இது மிகப்பெரிய அவமானம் அவருக்கு என்றும், ஒரு இரவு கேளிக்கை விடுதியில் இப்படிப்பட்ட கலைஞரின் உருவத்தை வைப்பது அவரது குடும்பத்தினரை சங்கடப்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். இருப்பினும், இந்த இந்நிகழ்ச்சியை நடத்தும் நிர்வாகம் இதற்கான சரியான ஒப்புதலை வாங்கியதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை சரிவர தெரியவில்லை.