உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. 

உக்ரைனை விட ராணுவ பலத்தில் ரஷ்யா யானை பலத்துடன் இருக்கிறது. தன்னுடைய ராணுவ பலத்தில் குறைந்த வலிமையுடன் இருக்கும் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ரஷ்யா, உக்ரைனின் ராணுவ பலத்தை ஒப்பீட்டு பார்க்கலாம்.

ரஷ்யாவில் கிட்டத்தட்ட 8,50,000 ராணுவ வீரர்கள் உள்ளனர். இது உக்ரைனின் 2,50,000 வீரர்களை விட மூன்று மடங்கு அதிகமாகும். விமான சக்தியைப் பொறுத்தவரை, ரஷ்யா 4,100 க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டுள்ளது, இதில் 772 போர் விமானங்கள் உள்ளன. அதே நேரத்தில் உக்ரைனில் மொத்தம் 318 விமானங்கள் உள்ளன. வெறும் 69 போர் விமானங்கள் மட்டுமே உள்ளன. ரஷ்யாவிடம் சுமார் 12,500 டாங்கிகள் மற்றும் 30,000 க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் உள்ளன. உக்ரைனில் சுமார் 2,600 டாங்கிகள் மற்றும் 12,000 கவச வாகனங்கள் மட்டுமே உள்ளன.

உலகளவில் ராணுவ பலத்தில் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், உக்ரைன் 22ஆவது இடத்திலும் இருக்கிறது. ரஷ்யாவின் மக்கள் தொகை 14,23,20,790 ஆகும். உக்ரைனின்  மக்கள் தொகை 4,37,45,640.  

ராணுவ வீரர்கள் 

8,50,000 ராணுவ வீரர்களை ரஷ்யா கொண்டுள்ளது. 2,00,000 லட்சம் ராணுவ வீரர்கள் மட்டுமே உக்ரைனிடம் இருக்கிறது. துணை ராணுவப்படை 2,50,000 ரஷ்யாவிடம் உள்ளது. உக்ரைனிடம் 50,000 துணை ராணுவப் படை மட்டுமே இருக்கிறது. 

கடற்படை 

ரஷ்யா - 605

உக்ரைன் - 38

மொத்த விமானங்கள்

ரஷ்யா - 4,173 

உக்ரைன் - 318

போர் விமானங்கள்

ரஷ்யா - 772

உக்ரைன் - 69

ஹெலிகாப்டர்கள்

ரஷ்யா - 1,543

உக்ரைன் - 112

கவச வாகனங்கள்

ரஷ்யா - 30,122

உக்ரைன் - 12,303

பீரங்கிகள்

ரஷ்யா - 12,420

உக்ரைன் - 2,596

தாக்குதல் ஹெலிகாப்டர்கள்

ரஷ்யா - 544

உக்ரைன் - 34

ராக்கெட் லாஞ்சர்

ரஷ்யா - 3,391

உக்ரைன் - 490