உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அதிகாலையில் தன்னுடைய அண்டை நாட்டு அதிபருக்கு அழைத்துச் சொன்ன விவகாரம் வெளியாகியுள்ளது. 


உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது. 


உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அதிகாலையில் தன்னுடைய அண்டை நாடான பெலாரஸ் அதிபருக்கு அழைத்துச் சொன்ன விவகாரம் வெளியாகியுள்ளது. 


இதுகுறித்து பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிகாலை 5 மணியளவில் பெலாரஸ் மற்றும் ரஷ்ய அதிபர்கள் தொலைபேசியில் பேசிக் கொண்டனர்.


இந்த அழைப்பின்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மற்றும் டான்பாஸ் எல்லையில் நிலவும் சூழல் குறித்து விளக்கினார் என்று தெரிவித்துள்ளது.


எனினும் இதற்கு ரஷ்ய அதிபரின் அலுவலகம் எந்த பதிலும் அளிக்கவில்லை. ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸில், ரஷ்யா ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களைக் குவித்து வைத்து, ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


நேட்டோவில் சேர விரும்புவதாக உக்ரைன் தெரிவித்து வந்த நிலையில் வெகுண்டெழுந்த ரஷ்யா, தன்னுடைய படைகளைக் கொண்டு வந்து, உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில் நிறுத்தியது. சுமார் 1,50,000 பேர் அங்கே குவிக்கப்பட்டனர். கூடவே மருத்துவ உபகரணங்கள், அதிநவீன பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஆகியவற்றையும் ரஷ்யா வைத்துள்ளதால் அங்கே போர்ப் பதற்றம் நிலவியது. அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தது.


இதைத் தாண்டி இன்று போர் தொடங்கப்பட்டுள்ளது. எனினும் இது போர் அல்ல; சிறப்பு ராணுவ நடவடிக்கையே என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Russia Ukraine War: விமானத்தளங்களை அழிச்சிட்டோம்.. மார்தட்டிய ரஷ்யா.. உக்ரைன் கொடுத்த பதிலடி என்ன?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண