Zelensky Resignation: ஏம்பா..இந்த நேட்டோவ விட மாட்டியா.? பதவி விலக ஜெலன்ஸ்கி போட்ட கன்டிஷன் என்ன.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், உக்ரைன் அதிபர் பதவியிலிருந்து விலக, ஜெலன்ஸ்கி சில கன்டிஷன்களை போட்டுள்ளார்.

Continues below advertisement

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், அங்கு தேர்தல் நடத்தாமல் சர்வாதிகாரம் செய்வதாக, அவர் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், தான் பதவி விலகத் தயார் என்றும், ஆனால் அதற்கு இப்படி செய்யப்பட வேண்டும் என்றும் கன்டிஷன் போட்டுள்ளார் ஜெலன்ஸ்கி.

Continues below advertisement

3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் போர்

நேட்டா அமைப்பில் இணைய உக்ரைன் முயன்ற நிலையில், அதை எதிர்த்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய போர், 3 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது. இந்த போரினால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தன. இந்த போரில், உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வந்த நிலையில், அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவியேற்ற ட்ரம்ப், காட்சிகளை மாற்றினார்.

ஜெலன்ஸ்கி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்த ட்ரம்ப், தேர்தலே நடத்தாமல், அவர் சர்வாதிகாரமாக செயல்படுவதாக விமர்சித்தார். மேலும், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக ஜெலன்ஸ்கி அனுமதிக்க மாட்டார் என்றும் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார் ட்ரம்ப். அதே வேளையில், ரஷ்யாவுடன் நெருக்கத்தை அதிகரித்துவரும் ட்ரம்ப், இந்த போரை நிறுத்துவதற்கு, பேச்சுவார்த்தை மூலம் முயன்று வருகிறார்.

பதவி விலக ஜெலன்ஸ்கி போட்ட கன்டிஷன் என்ன.?

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்ற விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் கடந்த 2024-ம் ஆண்டு நிறைவடைந்தது. ஆனால், போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்த அந்நாட்டின் சட்டத்தில் அனுமதி இல்லை. அதை காரணம் காட்டி, அதிபராக ஜெலன்ஸ்கியே தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து, தற்போது உக்ரைன் அதிபர் பதவியிலிருந்து விலகத் தயார் என ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

எனினும், அதற்கு சில கன்டிஷன்களை அவர் போட்டுள்ளார். இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், உக்ரைனில் அமைதி ஏற்படுமானால் பதவி விலகத் தயார் என்று அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம், நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்பட வேண்டும் என்றும், ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பிற்கு எதிராக, உக்ரைனுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார் ஜெலன்ஸ்கி. அதோடு, உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே, மத்தியஸ்தராக ட்ரம்ப் இருக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இந்த நிலையில், இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்ன பதிலளிக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola