உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியின் வாகன அணிவகுப்பின் மீது கார் ஒன்று மோதியதாக அவரது செய்தித் தொடர்பாளர் இன்று அதிகாலை தெரிவித்துள்ளார்.


அதிபர் கார் மீது கார் மோதல்


"கியேவ் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, உக்ரைன் அதிபரின் கார் மற்றும் அவரது எஸ்கார்ட் வாகனங்கள் மீது ஒரு கார் மோதியது" என்று செய்தித் தொடர்பாளர் செர்ஜி நிகிஃபோரோவ் பேஸ்புக்கில் உக்ரைன் நேரப்படி அதிகாலை 1:22 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அதாவது இந்திய நேரபடி அதிகாலை 3:22 மணிக்கு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு பெரிதாக காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். அவருடன் வந்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்தது மட்டுமின்றி, உடனே ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



உடனடி நடவடிக்கைகள்


மேலும் அவருடைய பதிவில், "அதிபர் ஜெலென்ஸ்கியை பரிசோதித்த மருத்துவர் கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். விபத்தின் அனைத்து சூழ்நிலைகளையும் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரிப்பார்கள்." என்று குறிப்பிட்டிருந்தார்.


தொடர்புடைய செய்திகள்: ”விஜயகாந்த் ஒரு மகான்; இதை செய்தால் இப்போகூட எழுந்து வந்துடுவார்“ - மனம் திறந்த ராதாரவி!


கார்கிவ் பகுதி கைப்பற்றல்


விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே அவர் சென்று பேசிவிட்டு வந்த உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனது. அந்த உரையில், கார்கிவ் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து தான் திரும்பி வருகிறேன் என ஜெலென்ஸ்கி கூறினார். அங்கு ரஷ்ய படையை வெளியேற்றுவதற்கான மின்னல்வேக எதிர் தாக்குதல் நடத்திய பிறகு கிட்டத்தட்ட முழு பிராந்தியமும் நம் வசம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறி இருந்தார்.



ஜெலென்ஸ்கி பெருமிதம்


மேலும் பேசிய அவர், "நமது புதிய வீரர்களுக்கு இதனை எதிர்கொண்டு பழக்கமில்லை, ஆனாலும் இதனை செய்து முடித்திருக்கிறார்கள். இதனை செய்வது இதுவே முதல்முறை. உக்ரேனியர்களால் எதை செய்யவே முடியாது என்று எல்லோரும் நினைத்தார்களோ அதனை மீண்டும் ஒருமுறை செய்து காட்டியுள்ளோம்" என்று பெருமை கொண்டார். உக்ரேனில் போர் ஒரு தீர்க்கமான கட்டத்திற்குள் நுழைகிறது. கியேவில் இருந்த உக்ரைன் படைகள் ரஷ்ய படையை கிழக்கில் இருந்து வெளியேற்றியது, முழு டான்பாஸ் பகுதியையும் கைப்பற்றும் கிரெம்ளினின் லட்சியத்திற்கு தீவிரமாக சவால் விடுவது போன்ற விஷயமாக இது பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண