உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்தார்.




கடந்த 2 நாட்களை தொடர்ந்து 3 வது நாளான இன்றும் உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் புரிந்து வருகிறது. அந்த நாட்டில் உள்ள பல இடங்களை ரஷ்யா கைப்பற்றி விட்டதாகவும், அந்த பகுதிகள் முழுவதும் ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய தாக்குதலில் 198 உக்ரைனியர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன் ராணுவ வீரர், ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து பாலம் ஒன்றை தகர்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திருக்கிறது.


உக்ரைன் கப்பற்படையில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச். அங்கு போர் நடந்து வரும் நிலையில் அவர், ஹெனிசெஸ்க் பகுதியில் அவர் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது, ஆக்கிரமிப்பான கிரிமியா பகுதியையும், உக்ரைனையும் இணைக்கும் வகையில் ஹெனிசெஸ்க் பாலத்தின் வழியே ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைய முயன்றன. பெரும்படை பலத்துடன் வந்த ரஷ்யாவை சமாளிக்க முடியாமல் உக்ரைன் ராணுவவீரர்கள் திணறினர். அவர்களை தடுக்க உக்ரைன் படையிடம் ஒரே வழி மட்டுமே இருந்தது.




அது, ஹெனிசெஸ்க் பாலத்தை தகர்த்து, அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்பது. இதனையடுத்து மேலதிகாரிகளிடம் உத்தரவின் படி இருந்து அந்தப் பாலத்தை தகர்க்க முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை கேட்ட விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் தாமாக முன் வந்து அந்தப்பாலத்தை வெடி வைத்து தகர்த்தார். ஆனால் இதில் சோக சம்பவம் என்னவென்றால் இதில், வோலோடிமிரோவிச்சும் உடல் சிதறி உயிரிழந்தார்.




பாலத்தை இவ்வளவு வேகமாக தகர்ப்பதற்கு காரணம் இருக்கிறது. ஹெனிசெஸ்க் பாலத்தில் இருந்து, உக்ரைன் தலைநகர் கீவ் வெறும் 30 மைல் தொலைவிலேயே இருக்கிறது. இந்தப் பாலத்தை தற்போது தகர்த்ததால் ரஷ்யா தற்போது பல கிலோமீட்டர்கள் சுற்றி, உக்ரைனுக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 


இதற்கிடையே விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோச்  வீரமரணம் அடைந்தது குறித்து ரஷ்ய ராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், “ நம் நாடு கடினமாக நாட்களை கடந்து வருகிறது. எதிரிகளை தனியாளாக சந்தித்த  வோலோடிமிரோவிச்  வீரமரணம் அடைந்திருக்கிறார். ரஷ்ய படைவீரர்களே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். இப்போது இந்த பூமி உங்களது காலடியில் எரியலாம். நாங்கள் அஞ்சமாட்டோம். வாழும் வரை போராடுவோம். நாங்கள் உயிருடன் இருக்கும் வரை போராடுவோம். வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு வீரச்செயலுக்கான விருது வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.