உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ”ரஷ்ய ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான செய்தி வதந்தி; அவ்வாறு நான் கூறவில்லை. உக்ரைன் நாட்டை ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. குழந்தைகளுக்காக போராடுகிறோம்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
44 வயதான அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா போன்ற பெரிய நாட்டுக்கு எதிரான தனி ஆளாக உக்ரைனை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தை பற்றி உலகெங்கும் பல தகவல்கள் கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் புகைப்படங்கள் பகிரப்பட்டு ரஷ்யாவுக்கு எதிரான போரில் அதிபரும் களத்தில் நிற்பதாக செய்தி பரவி வருகிறது. அதற்காக அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில், அதிகமாகப் பகிரப்பட்டு வரும் ஜெலன்ஸ்கியின் புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றி ஓர் அலசல்!
உண்மை என்ன?
ராணுவ உடை அணிந்து இருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் வைரல் புகைப்படங்கள் தற்போது நடைபெற்று வரும் போரில் எடுக்கப்பட்டது இல்லை. இந்த புகைப்படங்கள் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது. கிழக்கு உக்ரைன் பகுதியின் டொனெட்ஸ்க் பகுதியில் பணியில் இருந்த ராணுவத்தினரை சந்தித்தபோது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.
எனவே, இந்த புகைப்படங்கள் ரஷ்யா - உக்ரைன் போரில் எடுக்கப்பட்டது இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. எனினும், அதிபர் ஜெலன்ஸ்கியின் தலைமைக்கு உலக மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ரஷ்ய படைகளின் தாக்குதலில் பொது மக்கள் உயிரிழந்திருப்பதை உக்ரைன் நாட்டு சுகாதாரத்துறை இன்று உறுதிப்படுத்தி உள்ளது. மூன்றாவது நாளன இன்று, இதுவரை 198 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்