உக்ரைனின் தலைநகரான கியேவில் இருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் வடமேற்கு பக்கம் உள்ளது போரோடியங்கா நகரம். இந்த நகரைச் சேர்ந்தவர் 53 வயதான ஒக்ஸானா ஷெவ்செங்கோ. 30 வருடங்களாக இவர் இசை ஆசிரியராகப் பணிபுரிந்த இசைஒபள்ளி இன்று வெறும் பாழடைந்த நிலப்பரப்பாக மாறியுள்ளது. 


ஒக்ஸானாவின் சொந்த ஊரான போரோடியங்கா நகரத்தை ரஷ்ய இராணுவம் முழுமையாக கைப்பற்றுவதற்கு முன்னர் அந்த நகரம் மண் மற்றும் கலாச்சாரம் நிறைந்த ஒரு இடமாக திகழ்ந்தது என்றார். ஏராளமான குழந்தைகள் படித்த அந்த இடத்தில் வேலும் கல்லும் மண்ணும் சிமெண்டின் ஒரு குவியல் மட்டும் தான் மிச்சம் வேறு ஏதும் இங்கு இல்லை என மிகவும் மனபாரத்துடன் கண்கலங்கியுள்ளார் அந்த இசைப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளாக பணிபுரிந்த 53 வயதான இசை ஆசிரியர்.


பிப்ரவரி மாதம் 24ஆம் தேதிக்கு முன்னர் 14,000 மக்கள் வாழ்ந்த நகரம் போரோடியங்கா நகரம் தான் ரஷ்யத் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரம். டவுன்ஹால் அலுவலர்கள் கூற்றுப்படி, 12 மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகியுள்ளன. சுமார் 24 குடியிருப்புகள் சேதமடைந்தும் 400க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன. 


 



அடக்குமுறை உணர்வு 


ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து போரோடியங்கா நகரம் ஏப்ரல் 1ஆம் தேதி மீட்கப்பட்ட பிறகு ஷெவ்செங்கோ தனது இசைப் படங்களை ஒரு சிறிய வகுப்பறையில் இசைக்கருவிகள், நாற்காலிகள், பெட்டிகள், பெஞ்சுகள் வைத்து கற்று கொடுக்கிறார். அவர்களுக்கு நடந்த தாக்குதலை பற்றி கூறுகையில் ”ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து உருவாக்கிய ஒன்று தங்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக எடுக்கப்படும்போது அது மிகவும் வேதனையையும் மனஅழுத்தத்தையும் அளிக்கிறது, ஒடுக்குமுறையை உணர்த்துகிறது” என்றார். 


தற்போது இந்த இசைப்பள்ளி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நன்கொடை, வெளிநாடு மற்றும் உள்நாட்டின் உதவிகள் மூலம் தான் மீண்டுள்ளது என்றார். குழந்தைகள், ஆசிரியர்கள் திரும்பி வர விரும்புவதால் தொண்டு நிறுவனங்களின் அன்பான உதவியோடு எங்களின் இசைக்கருவிகளை புதுப்பித்து கொண்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.


இசை குணமாகிறது:


”இசை தற்போது குணமடைந்து வருகிறது. வெளிநாட்டில் இருப்பவர்களும்கூட பாடங்களைத் தொடர விரும்புகின்றனர். உள்நாட்டில் இருக்கும் குழந்தைகளும் மீண்டும் இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மீண்டும் அது பழைய நிலைமையை அடையும் என்று நம்புகிறோம்” என்கிறார் கிரிவோஷெயென்கோ. 


ரஷ்யத் தாக்குதலின்போது போரோடியங்கா நகரத்தில் எட்டுக் குழந்தைகள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். தற்காலிக மேயர் ஜார்ஜி யெர்கோவின் கூற்றுப்படி போரோடியங்கா நகரத்தில் சுமார் 9,000 பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் பாதி பேர் வீடற்றவர்கள். ”போர் கூடிய விரைவில் முடிவிற்கு வரும், எங்களின் வாழ்கை பயணம் தொடரும்” என்று நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறர்கள் போரோடியங்கா நகர மக்கள்!