அமெரிக்காவின் சுமார் 2 வயது சிறுமி ஒருவர் அரிதான ஒரு நோய் அறிகுறியால் ஐன்ஸ்டீன் போன்ற தலைமுடியுடன் தோற்றமளித்து இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறார்.


மிக அரிய நோய்


லைலா டேவிஸ் எனும் இந்த 18 மாத குழந்தையின் தலைமுடியை பிற மனிதர்களின் தலை முடி போல் சீப்பால் சீராக சீவ முடியாது.


 






வறண்ட உதிர்ந்த தலைமுடியை உண்டாக்கும் அரிதான Uncombable Hair Syndrome (UHS) எனும் நோய் அறிகுறியுடன் உள்ள இக்குழந்தை பிற குழந்தைகளில் இருந்து மாறுபட்டு தனித்துவமாகத் தெரிகிறார்.


தீர்வு


மேலும், உலகம் முழுவதும் இதுபோன்று UHS நோய் அறிகுறியுடன் வெறும் நூற்று சொச்சம் மனிதர்கள் மட்டுமே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த நோய்க்கு தீர்வு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், சிறுவர்கள் வயதுக்கு வரும் பருவத்தில் இந்நோய் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும் அல்லது முழுவதுமாக மறைந்துவிடும் எனவும் தெரிவிக்கின்றனர்.


இணையத்தில் ட்ரெண்ட்


இந்நிலையில், இந்நோய் அரிதான நோய் என்பதால் குழந்தைக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது என தாங்கள் தாமதித்தாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


 






எனினும் தனித்துவமான தன் முடியுடன் இக்குழந்தை வலம் வரும் புகைப்படங்களும் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.