பெண்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலம் என்றால் அது பிரசவ காலம் தான். ஏனென்றால் அந்த சமயத்தில் அவர்களுக்குள் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு அவர்கள் சாப்பிடும் உணவே கருப்பொருளாக அமைந்துள்ளது. ஆகவே அந்த சமயத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பார்கள். மேலும் குழந்தையின் வளர்ச்சி குன்றி இருந்தால் விரைவாகவே அதை மருத்துவர்கள் கண்டறிந்து சரி செய்ய முயற்சி செய்வார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் சில குழந்தைகளின் குறைகளை மருத்துவர்கள் கண்டறிய தவறுகின்றனர். 


அந்தவகையில் மருத்துவர் குழந்தையின் வளர்ச்சி பிரச்னையை கண்டறியாமல் குழந்தை பிறந்தவுடன் அந்த பிரச்னையை கண்டறிந்துள்ளார். அவருக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? எதற்காக இப்போது இந்த தீர்ப்பு? பிரிட்டன் நாட்டில் 2001ஆம் ஆண்டு இவா டூம்ப்ஸ் என்ற பெண் பிறந்துள்ளார். இவருக்கு பிறக்கும் போதே ஸ்பைனா பிஃபிண்டா என்ற நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இவருடைய தண்டு வட பகுதி சரியாக வளரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன்காரணமாக அவர் வாழ்நாள் முழுவதும் மாற்றுதிறனாளியாக தான் இருக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. 


மேலும் அவர் நடப்பதற்கே மிகவும் சிரமமாக இருந்துள்ளது. பல நாட்கள் இவர் சிகிச்சை எடுத்து கொண்டே இருக்க வேண்டிய நிலையையும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரத்திற்கு மேலும் அவர் டியூப் வைத்து சிகிச்சை எடுத்து கொள்ளும் நிலையும் உண்டாகியுள்ளது. அவர் பிறந்ததிலிருந்து இந்த பிரச்னையை சந்தித்து வருகிறார். எனினும் அவர் இதற்காக மனம் தளராமல் ஷோ ஜம்பிங் பயிற்சியை மேற்கொண்டு அந்தப் போட்டிகளில் பங்கேற்று அசத்தியுள்ளார். 




2018ஆம் ஆண்டு இவர் டூயூக் ஆஃப் சச்செக்ஸ் மற்றும் மேகன் மெர்களே ஆகிய இருவரையும் சந்தித்துள்ளார். இவருக்கு ஒரு இன்ஸ்பைரிங் நபர் என்ற விருது வழங்கப்பட்ட போது இவர் அவர்களை சந்தித்துள்ளார். அதன்பின்னர் சமீபத்தில் அவர் லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில்,”தன்னுடைய தாய் கருவுற்று இருந்த போது அவருக்கு மருத்துவர் சரியான அறிவுரை வழங்கவில்லை. மேலும் அவர் கருவுறுவதற்கு முன்பாக சரியான ஊட்டச்சத்தை எடுத்து கொள்ளவும் மருத்துவர் அறிவுறுத்தவில்லை. அதனால் தான் இப்படி பிறக்கும் போதே உடல்நல குறைப்பாட்டு உடன் பிறந்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். 


அவரின் கோரிக்கை ஏற்று விசாரித்த நீதிபதி 20 ஆண்டுகளுக்கு முன்பாக இவருடைய தாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவருக்கு அபராதம் மற்றும் இவருக்கு ஏற்படும் சிகிச்சை செலவிற்கு தேவையான நஷ்ட ஈட்டையும் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். இவருக்கு மருத்துவர் அளிக்க வேண்டிய தொகை என்ன வென்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அது தொடர்பான கணக்கு நடைபெற்று வருவதாக தெரிகிறது. 


மேலும் படிக்க: அப்படி என்னதான் பண்ணாரோ.? ஏர்போர்ட்டிலேயே மகனை செருப்பால் வெளுத்து வாங்கிய அம்மா!!