பிரிட்டனில் உள்ள லீட்ஸ் நகரில் பேருந்து தீ வைக்கப்படட்டு, காவல் துறை வாகனம் சேதப்படுதப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஹேர்ஹில்ஸ் (harehills) பகுதியில் திரண்ட போராட்டக்காரர்களில் ஒருவர் அங்கிருந்த Double Decker பேருந்து ஒன்றிற்கு தீ வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த காவல்துறை வாகனம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரட்டக்காரர்கள் காவல் துறையினர் மீது கல் எறிந்ததும் அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு Yorkshire நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர். பொது மக்கள் யாரும் வீட்டுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மாகாண மேயர் அறிவுறுத்தியுள்ளார்.


தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் தகவலின்படி, இதுவரை யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்திற்கு ஒருவர் தீ வைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Harehills கலவரம்:


இங்கிலாந்தில் உள்ள மேற்கு Yorkshire மாகாணத்தில் உள்ள Harehills நகரில் இந்த கலவம் ஏற்பட்டுள்ளது. 


செய்திகளில் கூறப்பட்டுள்ளதன்படி, ஹேர்ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினரிடமிருந்து குழந்தைகள் சோஷியன் சர்வீஸ் ஏஜெண்ட்டிடம் கொடுக்கப்பட்டது கலவரத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. உள்ளூர் மருத்துவம்னையில் காயமடைந்த குழந்தைக்கு  சிகிச்சைக்காக மருத்துவரிடம் சென்ற பெற்றோர்களிடன் காரணம் கேட்கப்பட்டுள்ளது. உடன்பிறந்தவர்களால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்ததோடு, நான்கு குழந்தைகளை சோசியல் சர்வீஸ் ஏஜென்ட்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியுள்ளது.  தங்களது குழந்தைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும், தீமைகளும் செய்யாமல் ஏன் அவர்களை எங்களிடமிருந்து பிரிக்கிறீர்கள் என்று பெற்றொர் கேள்வியெழுப்பியதாக தெரிகிறது. 






அதற்கு, மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது. இந்த முடிவை எதிர்பாராத பெற்றோர்கள் ஒன்னும் புரியாமல் இருந்துள்ளனர். குழந்தைகளை தங்களிடம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.நேற்று (18.07.2024) இரவு 9 மணி போல இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. அந்த குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதும் 50 காவல் துறையினர் குவிந்துள்ளனர்.இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் ஏராளமான மக்கள அந்தப் பகுதியில் திரண்டனர். காவல் துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.


பின்னர், லீட்ஸ் நகரில் உள்ள போராட்டாக்காரர்களில் காவல் துறையினர் மீது கல் எறிந்ததாகவும் பேருந்திற்கு தீ வைத்தாகவும் காவல் துறை வாகனம் ஒன்று சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. பிரிட்டன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் சோசியல் சர்வீஸ் நிறுவனத்தின் இரண்டு வாகனங்கள் தீ வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதிகாரிகள் விளக்கம்:


மேற்கு Yorkshire மாகாண மேயர் Tracy Brabin, (Mayor of West Yorkshire) எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டதன்படி மக்கள் அனைவரும் அவரவர் இருப்பிடத்தில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆங்காங்கே கலவரம் அதிகரித்திருப்பதால் பொது மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நிலையை கட்டுக்குள் கொண்டுவர உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த குற்றத்திக்கு காரணமான நபர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் ஏன் பிரிக்கப்பட்டார்கள், வீட்டில் என்ன நடந்தது உள்ளிட்டவை குறித்து தெளிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை.