பொதுவாக ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை, வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை என்பதே நாம் பழக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. சில தனியார் நிறுவனங்கள் ஒருநாளைக்கு 9 மணி நேர வேலை என்றும், வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என்பதையும் வைத்துள்ளன. ஆனால் வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை என்றால் எப்படி இருக்கும். 7 நாட்களில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை. கேட்கவே ஆசையாக இருக்கிறதுதானே? இப்படியான ஒரு முயற்சியை இங்கிலாந்து தற்போது கையில் எடுத்துள்ளது. இந்த சோதனை முயற்சி இன்று முதல் தொடங்கியுள்ளது. 


வெளியான தகவலின்படி, தொழிலாளர்கள் ஒரு வாரத்துக்கான 80% வேலையை பார்ப்பார்கள். அவர்களுக்கான 100% சம்பளம் வழங்கப்படும். அதுபோல 100 உற்பத்தித் திறனையும் கொடுக்க வேண்டும். அதாவது கொடுக்கும் நேரத்தில் ஆர்வமாக வேலையை பார்த்து வழக்கமாக கொடுக்கும் உற்பத்தித் திறனை கொடுத்தால் போதும் என்பதே திட்டம்.


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..




 இப்படி சென்றால் உற்பத்தித்திறன் மற்றும் பணியாளரின் நல்வாழ்வில் இது எது மாதிரியான வித்தியாசத்தை கொண்டு வரும் என என்பதை கண்டறியவே இந்த முறை தற்போது சோதனை செய்யப்படுகிறது. 


வாரத்துக்கு  4 நாட்கள் வேலை என்ற கணக்கில் அடுத்த 6 மாதங்களுக்கு இந்த முறை நடைமுறையில் இருக்கும். அது ஏற்படுத்தும் மாற்றங்களை ஆய்வாளர்கள் புள்ளிவிவரங்களாக குறிப்பெடுத்து இதற்கான முடிவு கண்டறியப்படும் என தெரிகிறது. இந்த சோதனை முறையை கடைபிடிக்க பல நிறுவனங்கள் முன் வந்துள்ளன . இதன் மூலம் தொழிலாளர்கள் ஆரோக்கியம், மன நிலை, நிறுவனத்தின் உற்பத்தி, செலவீனங்கள் என அனைத்தையுமே தெரிந்துகொள்ள முடியும் எனத் தெரிகிறது. இதன் மூலம் இருதரப்புக்குமே லாபம் என்றால் இதனை தொடர்ந்து கடைபிடிப்பதில் சிக்கல் இருக்காது எனக் கூறப்படுகிறது.


இது குறித்து தெரிவித்த சில நிறுவனத் தலைவர்கள், 4 நாட்கள் மட்டுமே வேலை என்பதால் தொழிலாளர்கள் இன்னும் கூர்மையாகவும், ஆர்வமாகவும் வேலை பார்ப்பார்கள். அவர்களுக்கான நேரத்தை மிகச்சரியாக பயன்படுத்துவார்கள். இதனால் இந்த முறை கைகொடுக்கும் என நினைக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்