இளஞ்சிவப்பு ஹிஜாப் ஆடையுடன் நடுரோட்டில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஸ்டாமர் நடந்து செல்லும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
புதிய பிரதமர்:
இங்கிலாந்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு, தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த கியர் ஸ்டாமர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்த தேர்தலானது, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மோசமான தோல்வியாக பார்க்கப்பட்டது. தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என இந்திய வம்சாவளியான முன்னாள் பிரதமர் ரிசி சுனக் தெரிவித்திருந்தார்.
ஹிஜாப் ஆடையில் பிரதமர்?
இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தொழிலாளர் கட்சியின் கியர் ஸ்டாமரின் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், இளஞ் சிவப்பு நிற ஹிஜாப் ஆடை அணிந்து, நடு ரோட்டில் நடந்து செல்வது போன்று இருக்கிறது.
இதையடுத்து, இந்தப் புகைப்படம் குறித்து , பலரும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை தெரிவிக்க ஆரம்பித்தனர்.
மேலும், சிலர் இது உண்மையா அல்லது பொய்யா என கமெண்ட் செய்திருந்தையும் பார்க்க முடிந்தது.
இந்த புகைப்படம் குறித்து, ஆய்வு செய்கையில், DFRAC இணையதளம் தெரிவித்துள்ளதாவது, இது செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் உருவாக்கப்பட்ட புகைப்படம் என கண்டறிந்து தெரிவித்துள்ளது.
ஆகையால், இது உண்மையான புகைப்படம் இல்லை எனவும், AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
Also Read: Watch Video: பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது.. எழுந்து நின்று மரியாதையளித்த ரஷ்ய அதிகாரிகள்!