சிறுநீரை தினமும் குடித்து வந்ததால் 10 வயது குறைந்தது போன்ற தோற்றமளிப்பதாகவும், இதனால் மன அமைதி கிடைப்பதாகவும் கூறுகிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர்.


இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதுடையை மேதாதீன் என்பவர் , அவரது சிறுநீரை தினமும் குடித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் சுமார் 200 மில்லி லிட்டர் குடிப்பதாகவும், அதனுடன் ஒரு மாத கால  சிறுநீரையும் சேர்த்து குடித்து வருகிறார். இந்த வித்தியாசமான நடைமுறை தனது மனச்சோர்வை குணப்படுத்தியாகவும் , தன்னை 10 வயது குறைந்தது போன்ற  தோற்றமளிக்கச் செய்துள்ளதாகவும் மேதாதீன் கூறுகிறார்.


ஹேம்ப்சயரைச் சேர்ந்த மேதாதீன் மன பிரச்னைககளால் பாதிக்கப்பட்டு, அப்பிரச்னைகளை தீர்க்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டில் இருந்து, சிறுநீரை அருந்த தொடங்கியதில் இருந்து மன பிரச்னை தீர்ந்ததாகவும், ஒரு புதிய சக்தியை பெற்றது போன்ற உணர்வை உணருவதாகவும் தெரிவிக்கிறார்.


இந்த வினோதமான நடமுறை குறித்து மேலும் கூறும் அவர், ''ஒவ்வொரு நாளும் தனது சொந்த சிறுநீரை சுமார் 2௦௦ மிலி குடித்து வருவதாகவும், தினசர் சிறுநீருடன் 1 மாதகால சிறுநீரை சேர்ந்து அருந்துவதாகவும்,மேலும் காலமான  சிறுநீரின் வாசனை அவருக்கு பிடிப்பதாகவும் , சுவையும் வாயுந்ததாக உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். மேலும் இதை இலவசமாக செய்ய முடியும் என்றும், எப்போதும் மகிழ்ச்சியான நிலையில் என்னை வைத்திருக்க முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சிறுநீரை அருந்துவது மட்டுமன்றி, அதை உடலில் தேய்த்து வருகிறார். சிறுநீரை முகம் மற்றும் உடலில் தேய்க்கும்போது, வித்தியாசத்தை உணருவதாகவும் தோல் இளமையாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு இந்த வித்தியாசமான நடைமுறையே காரணம் என தெரிவித்துள்ளார் .தோல் பராமரிப்பிற்கு சிறுநீர் சிகிச்சையை தவிர வேறு எதையும் பயன்படுத்துவதில்லை என்றும், இந்த இந்த வித்தியாசமான நடைமுறைக்கு, அவரது குடும்பம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறுகிறார்.


மருத்துவர் சொல்வது இதுதான்..


இந்த வினோதமான நடைமுறை குறித்து, கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து மருத்துவர் ஜெஃப் ஃபாஸ்டர், சிறுநீரை அருந்துவதாலும், உடலில் தேய்ப்பதாலும் எந்தவொரு நன்மையும் ஏற்படாது என்றும், மேலும் இது உடலுக்கு தீங்குதான் விளைவிக்கும் என்கிறார். மேலும் இதுபோன்ற நடைமுறை சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண