சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இயங்கி வருபவர் தொழிலதிபர் எலன் மஸ்க். உலகத்தில் என்ன நடந்தாலும் அது தொடர்பாக ட்வீட் செய்வதும் அதனை பேசுபொருளாக்குவதுமே அவரது ஸ்டைல். கடந்த மாதம் ட்விட்டரின் 9 சதவீத பங்குகளை வாங்கினார் எலன். இதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குழு உறுப்பினராக இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நிர்வாக போர்டு உறுப்பினர் குழுவில் இணைய மறுத்த எலான், இன்றைய தேதிக்கு ட்விட்டரை விலைக்கு வாங்கிவிட்டார்.  


இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் மீது கடன் வாங்க வங்கிகளில் எலன் சமர்ப்பித்திருக்கும் திட்ட வடிவத்தில், ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது என ரகசிய தகவல் வெளியானது. இதனால், அந்நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 


இந்த செய்தி பற்றிய விவாதங்கள் மறைவதற்குள், மற்றுமொரு அதிர்ச்சிரமான செய்தி வெளியாகியுள்ளது. அதில், ட்விட்டரின் தற்போதையை சி.இ.ஓ-வாக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த பரக் அக்ராவாலை வேலையில் இருந்து நீக்கி, வேறு ஒருவரை சி.இ.ஓ-வாக பணியமர்த்த எலன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்த ஜேக் டோர்சி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய சி.இ.ஓ.வாக இந்தியாவைச் சேர்ந்த பரக் அக்ராவல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் பதவி ஏற்று ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், எலன் மஸ்க்கின் புதிய திட்டத்தால் ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 






அதுமட்டுமின்றி, ட்விட்டர் நிறுவனத்தின் சட்ட ஆலோசகரான இந்தியாவைச் சேர்ந்த விஜயா கட்டேவையும் எலன் வேலையைவிட்டு நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 48 வயதான விஜயா கட்டே, ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலத்தை எண்ணி நிறுவன ஊழியர்களிடம் கண்ணீர் வடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இது குறித்து பரக் அக்ராவலிடம் கேட்டபோது, ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக எலன் மஸ்க்கிடம் ஒப்படைக்கும் வரை, ஊழியர்கள் வேலை பறிபோய்விடும் என கவலை கொள்ள வேண்டாம். எதிர்காலத்திலும் ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து தனது ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கும் என தெரிவித்திருக்கிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண