உங்கள் வீட்டில் கரண்டு கட் ஆன காரணத்தினால் என்றாவது இழப்பீடு பெற்றிருக்கிறீர்களா? இங்கிலாந்தில் ஒருவர் 234 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடாக பெற்றுள்ளார். அதற்காக இங்கிலாந்து அரசுக்கு நன்றி சொல்லி அவர் போட்டிருந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. இரண்டு மாதங்கள் முன்பு இங்கிலாந்தை கடும் பனிப்பொழிவுடன் அர்வென் புயல் தாக்கியது. அந்த புயலில் கடும் பாதிப்பை சந்தித்தது ஸ்காட்லாந்தும் இங்கிலாந்தும் தான். அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் சில நாட்களுக்கு மின்வெட்டு ஏற்பட்டு இருந்தது.






ஆனாலும் இந்த மின்வெட்டு வெகு விரைவாகவே ஒரு சில நாட்களில் சரி செய்யப்பட்டது. இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் மின்வெட்டு ஏற்பட்டால் அந்நாட்டு மக்கள் விண்ணப்பித்து அதற்கான இழப்பீடை பெறுவது வழக்கம். அது போலவே இங்கிலாந்தை சேர்ந்த கெரேத் ஹ்யூஸ் என்பவர் அர்வென் புயக்குக்கு பிறகு விண்ணப்பித்து இருக்கிறார். ஏதோ அதற்கான சிறிய தொகை வரும் என்று காத்திருந்த ஹயூஸுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நார்த் பவர் க்ரிட் அவருக்கு அனுப்பிய செக்கில் ரூ. 2,34,90,291 கோடி இழப்பீடாக எழுதப்பட்டிருந்தது. 






அந்த செக்கை படமெடுத்து ட்விட்டரில் பதிவிட்ட ஹ்யூஸ், "அர்வென் புயலால் மின்வெட்டு ஏற்பட்டதற்காக எனக்கு இழப்பீடு அளித்ததற்கு நன்றி, இதை நான் பேங்கில் கொடுப்பதற்கு முன், இவ்வளவு பெரிய தொகையை எனக்கு உங்களால் உண்மையிலேயே தரமுடியுமா?" என்று நக்கலாக கேள்வி கேட்டிருந்தார்.


அதற்கு பதிலளித்த நார்த் பவர் க்ரிட், "வணக்கம் கெரேத், இதனை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. உங்களது முகவரி, பெயர், கணக்கு விவரங்களை எங்களுக்கு அனுப்பவும், கூடிய விரைவில் அதனை சரி செய்கிறோம்" என்று எழுதியிருந்தனர்.


இதற்கு பின்புதான் ஹ்யூஸுக்கு மட்டும் இப்படி ஆகவில்லை, பலருக்கும் அது போன்று தவறாக சென்றுள்ளது என்று கமென்டில் பலர் தெரிவித்து இருந்தனர். சிலர் கமென்டில் சீக்கிரம் அதனை பேங்கில் கொடுத்து பணமாக மாற்றுங்கள் ஹ்யூஸ் என்று ஐடியா கொடுத்தனர்.