உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக தாயகம் திரும்புமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. முக்கியத்துவம் இல்லாத பயணத்தைத் தவிர்க்குமாறு இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.


முன்னதாக, உக்ரைன் உள்ள அமெரிக்க தூதகரத்தை தற்காலிகமாக இடமாற்றம் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க தெரிவித்தது.


ரஷ்யா- உக்ரைன் நாடகளுக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும், உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறல் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.  அமெரிக்கா- ரஷ்யா என இருநாடுகளின் படைகளும் உக்ரைனுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி- யுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.   


 






 


இதற்கிடையே, உக்ரைன் விவ்காரத்திற்கு மேற்கத்திய நாடுகளின் ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படும் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாரோவ் தெரிவித்துள்ளார். அதேசமயம், ரஷ்யாவின் நியாமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் பொறுப்பு மேற்கத்திய நாடுகளிடம் இருக்கிறது என்றும் கூறினார்.    இதனை, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வரவேற்றுள்ளன. உக்ரைன் மீது அத்துமீறல் தாக்குதல் நடத்தினால் ரஷ்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளன.     


 






இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் பயண அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. அதில், " உக்ரைனில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் முக்கியத்துவம் இல்லாத போது, தற்காலிகமாக தாயகம் திரும்ப வேண்டும். முக்கியத்துவம் இல்லாத பயணத்தைத் தவிர்க்குமாறு இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.  அவசர கால நடவடிக்கைகளை எடுப்பதற்காக, இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் குறித்து தகவல்களை உக்ரைனில் உள்ள  இந்திய தூதரகத்திடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். எப்போது போல், தூதரகம் தனது சேவைகளை வழங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Russia Ukraine Conflict: சத்தமில்லாமல் ஒரு உலகப்போர்.. தீப்பற்றத் தொடங்கும் உக்ரைன் - ரஷ்யா விவகாரம் - நடப்பது என்ன?