பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான உபர் ஈட்ஸ் கானபிஸ் என்னும் கஞ்சா டெலிவரியை கனடாவில் கொண்டு வருகிறது என்று நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
கஞ்சா விற்பனை இணையதளமான லீஃப்லி உடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்த உள்ளது. ஒரு முக்கிய மூன்றாம் தரப்பு தளத்தில் கஞ்சா டெலிவரி கிடைப்பது இதுவே முதல் முறையாகும். தொடக்கத்தில் உபர் ஈட்ஸ் டொரண்டோவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஹிட்டன் லீஃப் கஞ்சா, மினர்வா கஞ்சா மற்றும் ஷிவாஸ் ரோஸ் ஆகிய மூன்று சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து டெலிவரி செய்யும்.
"லீஃப்லி போன்ற இந்தத் தொழில்துறையில் முன்னனியில் உள்ள நிறுவனங்களுடன் நாங்கள் கூட்டு சேர்ந்துள்ளோம். சில்லறை விற்பனையாளர்கள், டொராண்டோவில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்கு வழங்குவதற்காக சட்டப்பூர்வ கஞ்சாவை வாங்குவதற்கு பாதுகாப்பான, வசதியான ஆப்ஷன்களை வழங்க உதவுகிறோம். இது சட்டவிரோத சந்தையை எதிர்க்க உதவும். மேலும் போதையில் வாகனம் ஓட்டுவதையும் கனிசமாகக் குறைக்கும்" என்று நிறுவனத்தின் பொது மேலாளர் லோலா காசிம் கூறியுள்ளார்.
"கடந்த சில ஆண்டுகளாக, நாங்கள் எங்கள் டெலிவரி வணிகத்தில் அதிக முதலீடு செய்துள்ளோம். மேலும் தேர்வு மிகவும் விரிவடைந்துள்ளது. உபர் ஈட்ஸ் விரைவாக வளர்ந்து பெரிய மற்றும் சிறிய பல்வேறு வணிகங்களால் பயன்படுத்தக்கூடிய பல்துறை தளமாக மாறியுள்ளது. கஞ்சா ஆர்டர் செய்ய, 19 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உபர் ஈட்ஸ் பயன்பாட்டுக்குச் சென்று கஞ்சா வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது கஞ்சா விற்பனையாளர்களில் ஒருவரைத் தேட வேண்டும். கஞ்சா விற்பனையாளர்களின் சொந்த கேன்செல் சான்றளிக்கப்பட்ட ஊழியர்களால் ஆர்டர் வழங்கப்படும். டெலிவரி வந்ததும், வாடிக்கையாளரின் வயது மற்றும் கஞ்சாவுக்கு உட்கொள்ளும் அவரின் நிதானத்தின் அளவு சரிபார்க்கப்படும்.
லீப்லி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவில் கஞ்சா சந்தையை மேம்படுத்தி வருகிறது. மேலும் GTA இல் 200 க்கும் மேற்பட்ட கஞ்சா விற்பனையாளர்களை நாங்கள் ஆதரிக்கிறோம். உபர் ஈட்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உரிமம் பெற்ற சில்லறை விற்பனையாளர்கள் நகரம் முழுவதும் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான, சட்டப்பூர்வ கஞ்சாவை கொண்டு வர உதவுகிறோம்,” என்று லீஃப்லியின் சிஇஓ யோகோ மியாஷிதா கூறினார்.
ஒன்டாரியோவில் ஜனவரி தொடக்கத்தில் இருந்து மார்ச் இறுதி வரையில் வாங்கப்பட்ட கஞ்சாவில் ஏறக்குறைய 57 சதவிகிதம் சட்ட வழிகள் மூலம் வாங்கப்பட்டதாக ஒண்டாரியோ கஞ்சா ஸ்டோர் (OCS) கடந்த வாரம் தகவல் வெளியிட்டிருந்தது. ஸ்டாடிஸ்டிக்ஸ் கனடா நிறுவனத்துக்கு நுகர்வோர்கள் தெரிவித்த தரவுகளின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
கஞ்சா வணிகத்திற்கு உபர் முற்றிலும் புதியது அல்ல. உபர் ஈட்ஸ் பயனர்கள் நவம்பர் முதல் டோக்கியோ ஸ்மோக் ஸ்டோர்களில் இருந்து கஞ்சா தயாரிப்புகளை ஆர்டர் செய்து வந்தனர், ஆனால் புதிய லீஃப்லி ஒப்பந்தம் போன்ற டெலிவரிகளை அங்கிருந்த பார்ட்னர்ஷிப் அனுமதிக்கவில்லை.
கோவிட்-19 கட்டுப்பாடுகள் இதுபோன்ற பாட் ஸ்டோர்களை மூடியதால் 2020ம் ஆண்டில் கஞ்சா கடைகளை வாடிக்கையாளர்களுக்கு கூரியர் ஆர்டர் செய்ய ஒண்டாரியோ தற்காலிகமாக அனுமதித்ததால் டெலிவரிகள் சாத்தியமானது.
இந்தக் கொள்கை மார்ச் மாதத்தில் நிரந்தரமாக்கப்பட்டது மற்றும் மாகாணத்தின் கஞ்சா ரெகுலேட்டரான ஒன்டாரியோவின் ஆல்கஹால் மற்றும் கேமிங் கமிஷனின் (AGCO) பல நிபந்தனைகளுடன் இது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.