உலகில் முதல் முறையாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த செவ்வாய் கிழமையன்று புதிய நான்கரை நாள் வேலை வாரத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இந்த புதிய அறிவிப்பு மத்திய அரசு நிறுவனங்களுக்குப் பொருந்தும். திங்கள் முதல் வியாழன் வரை வேலைநாட்கள் காலை 7:30 மணிக்கு தொடங்கி மாலை 3:30 மணிக்கு முடிவடையும் என்றும், வெள்ளிக்கிழமை வேலை நேரம் காலை 7.30 முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வெள்ளிக்கிழமை மட்டும் அரபு முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெறும் என்பதால் பிற்பகல் 1:15 மணி முதல் நடைபெறும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அறிவித்துள்ளது. அதேபோல், அரசாங்க ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், அவர்களின் வேலை நேரத்தை நேர அடிப்படையில் கணக்கிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 


உலகளாவிய ஐந்து நாள் வாரத்தை விட குறைவான தேசிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக தற்போது ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது. 


 






ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரப் போட்டித்தன்மையை முன்னேற்றுவதற்கு செயல்திறனை அதிகரிக்கும் அதே வேளையில் வேலை-வாழ்க்கை சமநிலையை அதிகரிக்கவும் சமூக நல்வாழ்வை மேம்படுத்தவும் இந்த புதிய முயற்சிகள் திகழ்கிறது. 


இந்த புதிய அறிவிப்பானது வருகின்ற ஜனவரி 1 ம் தேதி முதல் புதிய பணி நேரம் அறிமுகமாகிறது. அதன்படி, வெள்ளி மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி, ஞாயிறு உள்பட 2½ நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, பிற நாட்கள் வேலை நாட்களாக செயல்பட இருக்கிறது. 



 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண