அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவுக்கு மனிதர்களை முதல்முதலில் அனுப்பியது. தற்போது நாசா 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டிருக்கிறது.


இதனையடுத்து 12,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிலிருந்து நாசா 10 விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது. அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனனும் ஒருவர்.




திங்களன்று ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அருகிலுள்ள எலிங்டன் ஃபீல்டில் நடந்த நிகழ்வின்போது நாசா நிர்வாகி பில் நெல்சன் 10 பேரையும் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய நெல்சன், “ஆர்ட்டெமிஸ் தலைமுறையைச் சேர்ந்த 10 விண்வெளி வீரர்களை வரவேற்கிறோம்" என்றார்.


அடுத்த வருடம் (2022) ஜனவரி மாதத்திலிருந்து 10 பேர் நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டரில் பணிக்காகப் பதிவு செய்து இரண்டு வருட பயிற்சியைத் தொடங்க இருக்கிறார்கள்.






பயிற்சி முடிந்ததும், நாசாவின் ஓரியன் விண்கலம் மற்றும் விண்வெளி ஏவுகணை அமைப்பு ராக்கெட்டில் சந்திரன் உள்ளிட்ட இடங்களுக்கு விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வார்கள்.


யார் இந்த அனில் மேனன்?


இந்திய மற்றும் உக்ரேனிய பெற்றோருக்கு பிறந்து மினசோட்டாவில் வளர்ந்த அனில் மேனன் விமானி பயிற்சி பெற்று அமெரிக்க விமானப்படையில் லெப்டினன்ட் கர்னலாக இருந்தவர். மருத்துவரான இவர் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்கலங்களில் சர்ஜனாக பணியாற்றியவர்.


2018லிருந்து எலான் மஸ்க்கின் ஸ்பேக்ஸ் எக்ஸில் சர்ஜனாக இருக்கிறார். அனில் மேனன் 1999 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நியூரோபயாலஜியில் பட்டம் பெற்றார். 




2004 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சர்வதேச விண்வெளியின் நிலையத்துக்கு நாசா விண்கலங்கள் மூலம் பலமுறை சென்று வந்திருக்கிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண