சீன தம்பதிகள் மூன்று குழந்தைகளைப்பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு அரசு மானியங்கள் மற்றும் வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குவோம் என சீன மாகாண அரசு அறிவித்துள்ளது.


உலகில் அதிக மக்கள்தொகைக்கொண்ட நாடு சீனா என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்று. இங்கு அதிகரித்துவரும் இந்த மக்கள் தொகைக்கட்டுப்படுத்தும் விதமாக முந்தைய ஆண்டுகளில் சீன அரசு ஒரே ஒரு குழந்தையை தான் மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என அதிரடி உத்தரவினைப்பிறப்பித்தது. இந்த அறிவிப்பு ஆரம்பத்தில் சீன மக்களுக்கு அதிர்ச்சியாகவும், இதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை தரவில்லை. இருந்தப்போதும் நாளடைவில் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆகும் செலவுகளைப்பார்த்து “ஒரே குழந்தையை தான் பெற்றுக்கொளள் வேண்டும் என்ற அறிவிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.. இதனையடுத்து சில ஆண்டுகளுக்குப்பிறகு  இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீன அரசு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் பல தம்பதிகள் குழந்தைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத நிலை தான் ஏற்பட்டுள்ளது. பிறக்கும் அனைத்துக்குழந்தைகளுக்கும் தேவையான அனைத்தையும் செய்ய முடியாது என்ற மனநிலையில் தான் மக்கள் இருந்தனர்.





இதுப்போன்ற சூழலில் தான் சமீபத்தில் எடுத்த மக்கள் தொகைக்கணக்கெடுப்பின் படி, சீனாவில் பிறப்பு விகிதம் குறைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பிறப்புக்கொள்கையை மேலும் மேம்படுத்தும் விதமாக திருமணமான தம்பதியினர் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என கடந்த ஆகஸ்ட் மாதம்  அதிரடி உத்தரவைப்பிறப்பித்தது.. இந்த அறிவிப்பு சீனாவில் மிகப்பெரிய கொள்கை மாற்றம் என கருதப்பட்டது.


ஆனால் ஒரு கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் மறுபுறம் பொருளாதார நெருக்கடியான சூழல் இருக்கும் வேளையில், எப்படி மூன்று குழந்தைகளைப் பெற்றுவளர்க்கப்போகிறோம்? என்ற எண்ணம் சீன மக்களிடையே மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இதனையெல்லாம் யோசித்து தான் சீன அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.





அதன்படி, சீனாவில் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளும் தம்பதியினர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அரசு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை மாகாண அரசுகள் அறிவிக்கத்தொடங்கின. மேலும் பீஜிங், சிச்சுவான் மற்றும் ஜியாங்கி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாகாணங்களில் கூடுதல் சலுகையாக மகப்பேறு விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்தல் மற்றும் தந்தைவழி விடுப்பை அதிகரிப்பது போன்றவற்றை நடைமுறைப்படுத்தும் என அறிவித்துள்ளது.  இதனால் சீன மக்களுக்கு மூன்று குழந்தைகளை வளர்ப்பதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு மக்களுக்கு மிகுந்த உறுதியாக இருக்கும் என நம்புவதாக சீன அரசு  நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. மேலும் சீன மாகாண அரசின இந்த அறிவிப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது.