கரணம் தப்பினால் மரணம் என்ற கூற்றின்படி மிகவும் மெல்லிய வித்தியாசத்தில் ஒருவர் உயிர் தப்புவது மிகவும் ஆச்சரியமான ஒன்று. அந்த வகையில் இரு பெண்கள் தங்களுடைய வாழ்வில் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பியுள்ளனர். அப்படி அவர்கள் அந்த அளவிற்கு செல்ல காரணம் என்ன? எப்படி உயிர் தப்பினர்.  ரஷ்யாவின் டாகெஸ்டான் பகுதியில் அமைந்துள்ள மலைப் பகுதியில் காஸ்பியன் கடலுக்கு மேல் ஒரு இடம் உள்ளது. 


இந்த இடம் ரஷ்யாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சுற்றுலா இடம். இந்த இடத்தில் வருபவர்கள் 6300 அடி உயரத்தில் இருந்து காஸ்பியன் கடலின் அழகை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே இப்பகுதிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த இடத்தில் ஊஞ்சல் வைத்து சிலர் ஆடியுள்ளனர். அந்த சமையத்தில் இரு பெண்கள் இந்த ஊஞ்சலில் ஏறி ஆடியுள்ளனர். பின்னே இருந்து ஒருவர் அந்த ஊஞ்சலை தள்ளிவிட்டு வந்துள்ளார். 


 






அந்த சமயத்தில் திடீரென அந்த ஊஞ்சலின் கயிறு எதிர்பாராத விதமாக அறுந்து உள்ளது. அப்போது ஊஞ்சலில் இருந்த இரண்டு பெண்களும் கீழே விழுந்துள்ளனர். இவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக அங்கு ஒரு இருந்த மட்டமான பகுதியில் விழுந்துள்ளனர். இதன் காரணமாக முழு அடி ஆழமாக கீழே விழாமால் தப்பித்து உள்ளனர். அவர்கள் இருவருக்கும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் கீழே விழுந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்று கூறப்படுகிறது.  


இந்த விபத்து தொடர்பாக வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோவை தற்போது வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் இவ்வளவு உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்து அவர்கள் உயிர் தப்பியது மிகவும் அதிசயமான ஒன்று என்று பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் ஒரு சிலர் இவ்வளவு ஆபத்தான இடத்தில் அவர்கள் எதற்காக ஊஞ்சல் வைத்து ஆட வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.  இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற ஆபத்தான விஷயங்களை செய்ய நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ ஒரு பாடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 2 வயதில் தொலைந்த மகன், 24 வயதில் கண்டுபிடித்த தந்தை: சினிமாவை விஞ்சும் சீன சுவாரஸ்யம்..!