வளர்ந்து வரும் நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு உள்ள பிரிக்ஸ் அமைப்பில் சேர்வதற்கு ஈரான் விண்ணப்பித்துள்ளதாக ஈரான் உயர் மட்ட அலுவலர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பில் சேர்வது இரண்டு தரப்பிற்கும் மதிப்பு சேர்க்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பிரிக்ஸ் அமைப்பில் சேர்வதற்கு அர்ஜென்டினா தனியாக விண்ணப்பித்துள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா சகோரோவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அர்ஜென்டினா அலுவலர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை.
ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அர்ஜென்டின அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், பிரிக்ஸ் அமைப்பில் சேர்வதற்கு சமீக காலங்களில் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து டெலிகிராமில் விரிவாக கருத்து பதிவிட்டுள்ள சகோரோவா, "தடை விதித்தோ அல்லது கெடுத்தோ உலகை எப்படி எல்லாம் இருளில் சூழ வைக்கலாம் என வெள்ளை மாளிகை (அமெரிக்கா) யோச்சித்து கொண்டிருக்கும் சூழலில், அர்ஜென்டினா மற்றும் ஈரான் நாடுகள் பிரிக்ஸில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளன" என்றார்.
ஆசியா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுடன் உறவை வளர்க்க ரஷ்யா பல காலமாக முயற்சி வருகிறது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பிறகு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மற்றும் பிற நாடுகள் விதித்த கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில் அந்த முயற்சிகளை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
சமீபத்தில், நெரிசலான ஷாப்பிங் சென்டர் மீதான ஏவுகணை தாக்குதல் உள்பட ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் சிக்கி 28 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு தீவிர ஆதரவை தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்