dwarf galaxy எனப்படும் குள்ள விண்மீன் திரள்களில் இரண்டு பிரம்மாண்டமான கருந்துளைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வது போல் தோற்றமளிக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. நாசாவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகத்தைப் பயன்படுத்தி கருந்துளைகள் கண்காணிக்கப்பட்டுள்ளன, மேலும் இது போன்ற நிகழ்வின் முதல் பதிவு என தெரிவிக்கபட்டுள்ளது.






இந்த நிகழ்வு விஞ்ஞானிகளுக்கு ஆரம்பகால பிரபஞ்சத்தில் கருந்துளைகளின் வளர்ச்சி மற்றும் குள்ள விண்மீன்களின் பரிணாமம் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்க முடியும். இந்த விண்மீன் திரள்கள் பால்வீதியை விட 20 மடங்கு குறைவான நட்சத்திரங்களை பெற்றிருக்கும்.  dwarf galaxy எனப்படும் குள்ள விண்மீன் திரள்களின் இந்த செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக பெரிய விண்மீன் திரள்களாக வளர வானியலாளர்கள் நீண்ட காலமாக ஆராய்ந்து வருகின்றனர். இருப்பினும், தற்போதைய தொழில்நுட்பம் கொண்டு முதன்முதலில் தோன்றிய குள்ள விண்மீன் பற்றி கணிக்க முடியாது என்கிறனர்.  


ஒரு புதிய ஆய்வில் அடையாளம் காணப்பட்ட குள்ள விண்மீன் திரள்கள் இடையிலான மோதல்கள், அவை ஒவ்வொன்றிலும் உள்ள மாபெரும் கருந்துளைகளை நோக்கி வாயுவை இழுத்து, கருந்துளைகள் வளர காரணமாகின்றன. ஆரம்பகால குள்ள விண்மீன் திரள்களை தற்போதைய தொழில்நுட்பம் மூலம் அவதானிக்க இயலாது, ஏனெனில் அவை மிகவும் தொலைவில் மங்கிய நிலையில் உள்ளது.. "வானியல் வல்லுநர்கள் பெரிய விண்மீன் திரள்களில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும், கருந்துளைகளின் பல எடுத்துக்காட்டுகளைக் கண்டறிந்துள்ளனர், அவை மிகவும் நெருக்கமாக உள்ளன. ஆனால் குள்ள விண்மீன் திரள்களில் கருந்துளைகளை தேடுவது மிகவும் சவாலானது மற்றும் இது வரை சாதியமாகவில்லை, ”என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய அலபாமா பல்கலைக்கழகத்தின் மார்கோ மைசிக் தெரிவித்துள்ளார்.


சந்திரா எக்ஸ்-ரே அவதானிப்புகளின் முறையான ஆய்வு, நாசாவின் வைட் இன்ஃப்ராரெட் சர்வே எக்ஸ்ப்ளோரரின் (WISE) மற்றும் கனடா-பிரான்ஸ்-ஹவாய் தொலைநோக்கி (CFHT) ஆப்டிகல் தரவு ஆகியவற்றுடன் ஒப்பிடப்பட்டது. குள்ள விண்மீன் திரள்கள் மோதியதில் பிரகாசமான எக்ஸ்ரே மூலம் இரண்டு கருந்துளைகளின் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது.  ஒரு ஜோடி பூமியிலிருந்து 760 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஏபெல் 133 என்ற விண்மீன் தொகுப்பில் இருக்கும் போது, ​​மற்ற ஜோடி சுமார் 3.2 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஏபெல் 1758S என்ற விண்மீன் தொகுப்பில் கண்டுபிடிக்கப்பட்டது.


 "குள்ள விண்மீன் திரள்களில் மோதிய முதல் இரண்டு வெவ்வேறு ஜோடி கருந்துளைகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த அமைப்புகளை ஆரம்பகால பிரபஞ்சத்தில் உள்ளவர்களுக்கான ஒப்புமைகளாகப் பயன்படுத்தி, முதல் விண்மீன் திரள்கள், அவற்றின் கருந்துளைகள் மற்றும் நட்சத்திரங்களின் உருவாக்கம் ஆகியவற்றின் மோதல்கள் பற்றிய தகவல்களை நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும், " என  ஓ-ஆசிரியர் ஒலிவியா ஹோம்ஸ் கூறினார்.