வட கொரியா மூன்று குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதை அடுத்து, தென் கொரியா இன்று  அதன் கிழக்கு கடற்கரையில் உள்ள உல்லுங்டோ தீவில் வசிப்பவர்களை பதுங்கு குழிகளுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.


மூன்றில் ஒரு ஏவுகணை உயர் கடலில் இறங்குவதற்கு முன் தீவை நோக்கி நெருக்கமாகச் சென்றது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு தெரிவித்ததாக அங்கிருந்து வரும் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை உல்லுங்டோ வாசிகளிடம் அருகில் உள்ள நிலத்தடி தங்குமிடத்திற்கு வெளியேற அறிவுறுத்தியுள்ளது.


தென்கொரியாவின் அண்டை நாடான வட கொரியா புதன்கிழமை  அன்று அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. தென் கொரியாவும் அமெரிக்காவும் அண்மையில் பெரிய அளவிலான கூட்டு விமானப் பயிற்சிகளை மேற்கொண்டது. இந்தக் கூட்டு விமானப் பயிற்சிகளை அடுத்து வடகொரியத் தலைநகரான பியோங்யாங் எச்சரிக்கை விடுத்தது. அதை அடுத்துதான் இந்த பாலிஸ்டிக் சோதனை நிகழ்ந்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.


"வட கொரியா அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை கிழக்குக் கடலை நோக்கிச் செலுத்தியது" என்று கூட்டுப் படைத் தலைவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஜப்பான் கடல் என்றும் அழைக்கப்படும் நீர்நிலைப் பகுதியில் இந்த உல்லுங்டோ தீவு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தென்கொரியா பல்வேறு வகைகளில் அண்மைக்காலத்தில் தொடர் இடர்ப்பாடுகளைச் சந்தித்து வருகிறது.


சியோலின் இடாவோனில் ஹாலோவீன் பார்ட்டிகளில் கூட்டம் அலைமோதியதில் குறைந்தது 120 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


நெரிசலில் சிக்கி பலர் உயிரிழப்பு






அவசரநிலை அதிகாரிகளின் கண்ட்ரோல் ரூமுக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதாக குறைந்தது 81 அழைப்புகள் வந்ததாக தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோலின் யோங்சன் தீயணைப்புத் துறையின் தலைவர், சோய் சியோங்-பீம், நேற்று இரவு இடாவோனில் ஏற்பட்ட நெரிசலைத் தொடர்ந்து சியோல் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை கொண்டு சென்றதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறினார். இறந்தவர்களில் 13 பேர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், மீதமுள்ள 46 பேரின் உடல்கள் இன்னும் தெருக்களில் உள்ளன என்றும் சோய் கூறினார். 


சாலையெங்கும் ஆம்புலன்ஸ்


சியோலில் உள்ள ஹாமில்டன் ஹோட்டலுக்கு அருகிலுள்ள ஒரு குறுகிய சந்தில் ஒரு பெரிய கூட்டம் முன்னோக்கி தள்ளத் தொடங்கிய பின்னர் 400க்கு மேற்பட்ட மக்கள் நசுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து 140 ஆம்புலன்ஸ் வாகனங்கள், அவசர கால பணியாளர்கள், சியோலில் உள்ள அனைத்து பணியாளர்கள் உட்பட பலர், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தெருக்களில் நிறுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் துல்லியமாக கண்டறிய முயன்று வருகின்றனர். ஆனால் இதுவரை வெளியிடப்படவில்லை.


வீடியோவில், டிவி காட்சிகள் மற்றும் சமூக வலைதள வீடியோக்கள் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையாக நிற்பதைக் காட்டியது. காயமடைந்தவர்களை ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு செல்லும் அவசரகால பணியாளர்கள் மற்றும் பாதசாரிகள் தெருக்களில் கிடக்கும் மக்களுக்கு CPR செய்வதையும் காண முடிந்தது. காயமடைந்தவர்களில் பலர் மஞ்சள் போர்வைகளால் மூடப்பட்டிருப்பதை விடியோவில் காணலாம்