Twitter Down: உலகின் பல்வேறு பகுதிகளில் எக்ஸ் தளம் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) முடங்கிய சம்பவம் பெரும் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாமல் பயனர் குழப்பம் அடைந்தனர்.


சமூக வலைதளங்களின் வளர்ச்சி:


வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே சமூக ஊடகங்கள் மாறிவிட்டன. உலகம் முழுவதும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூக ஊடக பயனர்களின் எண்ணிக்கை தற்போது 4.9 பில்லியனாக உயர்ந்துள்ளது.


வரும் 2027ஆம் ஆண்டுடன் அந்த எண்ணிக்கை 5.85 பில்லியனாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் 143 நிமிடங்கள் வரை சமூக ஊடகத்தை பயன்படுத்துவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. சமூக வலைதளங்கள் முடங்கினால் ஒட்டு மொத்த உலகமே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.


இந்த நிலையில், சமீப காலமாக, சமூக வலைதளங்கள் முடங்குவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, மெட்டாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் முடக்கம் காண்பது பயனர்களை பெரும் சிரமத்திற்கு உண்டாக்கி வருகிறது.


முடக்கம் கண்ட எக்ஸ் தளம்:


இந்த மாத தொடக்கத்தில் கூட, மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஒரு மணி நேரம் வரை முடங்கியது. மேலும், மார்ச் மாதத்தில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெஸ்சேன்ஜ்ர் மற்றும் த்ரேட்ஸ் ஆகியவை முடங்கியது. இதனால் பயனர்கள் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்களுக்கு இந்த தளங்களை பயன்படுத்த முடியாமல் போனது.


 






அதன் தொடர்ச்சியாக, உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-க்கு சொந்தமான எக்ஸ் தளம் இன்று முடங்கியது. எக்ஸ் தளத்தை அதன் பயனர்களால் பயன்படுத்த முடியவில்லை. இணைய முடக்கங்களை கண்காணிக்கும் Downdetector இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், "எக்ஸ் தளத்தை குறிப்பிட்டத்தகுந்த பயனர்களால் பயன்படுத்த முடியவில்லை" என குறிப்பிட்டுள்ளது.


இப்படி அடிக்கடி சமூக வலைதளங்கள் முடக்கம் கண்டு வரும் நிலையில், தேவையான நடவடிக்கைகளை எடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்படாதவாறு சர்வர்களை அப்டேட் செய்ய வேண்டும் என பயனர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதையும் படிக்க: China - India Border : விஸ்வரூபம் எடுக்கும் சீன பிரச்னை.. பதிலளித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார் தெரியுமா?