அரசு முறை பயணமாக ஈரான் சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபரை சந்திப்பதற்கு முன் 50 வினாடிகள் காக்க வைக்கப்பட்ட வீடியோ வெளியாகி பேசுபொருள் ஆகியுள்ளது.


ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு கோர பயணம்


உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.


லட்சக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்து வரும் நிலையில், இப்போரின் விளைவாக உலக அளவில் பொருளாதாரம் பாதிப்பை சந்தித்துள்ளது.


இந்நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஈரானின் ஆதரவைப் பெறுவதற்காக அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான் சென்றுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.


காக்க வைத்த துருக்கி அதிபர்


இப்பயணத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோரை சந்தித்து புதின் ஆலோசனை நடத்தினார்.


இந்நிலையில், துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்த போது விளாடிமிர் புதின் 50 வினாடிகள் காத்திருக்க வைக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.


 






பழி வாங்கும் செயலா?


துருக்கி அதிபர் மாளிகை தரப்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய அதிபரை பழிவாங்கும் விதத்தில் துருக்கி அதிபர் இவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


முன்னதாக ரஷ்ய அதிபர் புதின், துருக்கி அதிபர் எர்டோகன் உள்பட பல தலைவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து காத்திருக்க வைத்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது விளாடிமிர் புதின் காத்க வைக்கப்பட்ட இச்சம்பவம் உலக அளவில் இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண