பெங்களூரு, இந்திரா நகரைச் சேர்ந்த 67 வயது பெண் முன்னதாக தனது குழந்தைகளுடன் ஓரிகானில் சில ஆண்டுகளாக வசித்து வந்தார். 


26 மணி நேரம் பயணம்


இவர் சமீபத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவிலேயே உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை திருப்தியளிக்காத நிலையில், தற்போது சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.


அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு 26 மணி நேர ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் நேற்று (ஜூலை.19) இப்பெண் அழைத்து வரப்பட்டுள்ளார். இந்தத் தனி விமானம், அமெரிக்காவின் போர்ட்லேண்டில் இருந்து ஐஸ்லாந்து, துருக்கி வழியாக சென்னையை வந்தடைந்துள்ளது.


1.6 கோடி செலவு


இந்த ஆம்புலன்ஸ் விமானம் பயணத்துக்கு மட்டும் 1,33,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடியே ஆறு லட்சத்து 41 ஆயிரத்து 204 ரூபாய் செலவழித்துள்ளார். 


இதுகுறித்து முன்னதாக ICATT எனப்படும் தனியார் ஏர் ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான டாக்டர் ஷாலினி நல்வாட் கூறுகையில், ”அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவரை அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வர விரும்பி எங்கள் உதவியை நாடினர்.


அமெரிக்க சிகிச்சையில் உள்ள சிக்கல்கள்


அமெரிக்காவில் மேற்கொண்ட சிகிச்சைக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது, அவரை இந்தியாவுக்கு விமானத்தில் கூட்டி வருவதைவிட அங்கு அவர்களுக்கு அதிக செலவாகும். மேலும், இப்பெண் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் என்பதால் மருத்துவக் காப்பீட்டிலும் அவருக்கு சிக்கல்கள் இருந்தன” எனத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், நேற்று மதியம் 2.10 மணிக்கு சென்னை வந்தடைந்த இப்பெண் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார்.




மேலும் படிக்க: Watch Video: டயரின் அடியில் சிக்கி ஹெல்மெட்டால் நூலிழையில் உயிர் தப்பித்த நபர்! - ஷாக் வீடியோ


Sri Lanka New President: பரபரப்பாக நடந்த இலங்கை அதிபருக்கான வாக்கெடுப்பு...ராஜபக்ச கட்சியின் ஆதரவோடு ரணில் வெற்றி..!


Sri Lanka Presidential Election: வாக்குச்சீட்டைப் படம் எடுத்தால் 7 வருடங்கள் சபைக்கு வரத் தடை.! இலங்கை சபாநாயகர் எச்சரிக்கை


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண