பிப்ரவரி 6 அன்று மத்திய துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு பல்வேறு நாடுகள் துருக்கிக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. நட்பு நாடான இந்தியாவும் ஆபரேஷன் தோஸ்த் மூலம் மீட்பு உதவிகளை வழங்கி வருகிறது. இதை அடுத்து தங்களுக்கு உதவி வழங்கியதற்காக இந்தியாவுக்கு துருக்கியைச் சேர்ந்த மக்கள் நன்றி தெரிவித்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “இந்திய குழு தானாக முன்வந்து எங்களுக்கு உதவியது. நாங்கள் அதுவரை யாருமற்றது போல உணர்ந்தோம். ஆனால் அவர்கள் இங்கு வந்ததும் நாங்கள் பாதுகாப்பாக உணரத் தொடங்கினோம். இந்தியாவின் ஆதரவுக்கு மிக்க நன்றி,” என்று அதில் ஒருவர் கூறினார்.
மேலும் ஒருவர் “கடவுள் இந்தியாவை ஆசீர்வதிப்பாராக. மிக்க நன்றி,” என்றார். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழு, 6 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகளை இடிபாடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியே எடுத்ததாக அண்மையில் தெரியவந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ இந்தியா "ஆபரேஷன் தோஸ்த்" என்கிற பேரிடர்கால மீட்புக் குழுவைத் தொடங்கியது. 'ஆபரேஷன் தோஸ்த்'-ன் கீழ், மத்திய சுகாதார அமைச்சகம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவியை வழங்கியது.
துருக்கி மற்றும் சிரியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் இன்று இரவு முடிவுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46,000ஆக பதிவாகியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் 11 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் இதுவரை 46,000 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் உள்ளூர் மக்களிடையே குடல் மற்றும் மேல் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன, ஆனால் இந்த எண்கள் பொது சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 நாட்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 46,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, துருக்கியில் உள்ள மூன்று லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் இடிந்து விழுந்தது, பலர் இன்னும் காணவில்லை. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 296 மணிநேரம் கடந்துவிட்டதால், மேலும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால், துருக்கி தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் தென்கிழக்கு கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் அதன் மையப்பகுதியுடன் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பிப்ரவரி 6 அதிகாலையில் தாக்கியது, அதைத் தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று பரவும் சாத்தியம் குறித்து கவலைகள் அதிகரித்து வருகின்றன. துருக்கிய சுகாதார அமைச்சர் Fahrettin Koca, குடல் மற்றும் மேல் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள போதிலும், இந்த எண்கள் பொது சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.