Turkey Accident: துருக்கி நாட்டில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோர விபத்து
கிழக்கு துருக்கியில் அக்ரி மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. லாரி மீது பயணிகள் பேருந்து மோதி தீப்பிடித்தது. உடனே பயணிகள் அலரியடித்து வெளியே வர முயன்றனர். பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் கண்ணாடிகளை உடைத்து கொண்டு கீழே குதித்து தப்பினர். எனினும் பேருந்துக்குள் தீ வேகமாக பரவியதால் வெளியேற முடியாமல் பேருந்திலேயே 7 பேரின் உடல் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் என போலீசார் தெரிவித்தனர். படுகாயமடைந்த 11 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடம் முழுவதும் தீ மூட்டமாக சிறிது நேரம் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் சாலை விபத்து :
இந்தியா உட்பட பல நாடுகளில் சாலை விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கணெக்கெடுப்பின் படி ,தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதிவிரைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே ஆண்டில் ஏற்பட்ட மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 1.16 லட்சம். ஒரு நாளைக்கு சராசரியாக 300 முதல் 400 பேர் வரையில் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். விபத்தில் கிட்டத்தட்ட 70 சதவிதத்தினர் வேகமாக வாகனங்களை ஓட்டுவதாலும் , 6 சதவிகிதத்தினர் சாலை விதியை முறையாக பின்பற்றாததாலும் உயிரிழந்திருக்கின்றனர். இதில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் அடங்குவர். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அதிகப்படியான விபத்துகள் பகலில்தான் நடக்கிறது.
அபோன்று உலகளவில் பொருத்தவரை, சாலை விபத்தில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முதல் 20 நாடுகளின் பட்டியலில் சீனா, ஈரான், கொரியா, துருக்கி, ரஷ்யா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் அதிகளவு சாலை விபத்துக்கள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் உள்ளன. அதிவேகம், தரமற்ற சாலைகள், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது, தரமற்ற வாகனங்கள் போன்றவையால் தான் சாலை விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது.