தென்கிழக்கு ஆசிய நாடான கிழக்கு தைமூர்பகுதியில் (East Timor) இன்று 6.1 ரிக்டேர் அளவில் நில்நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக (US Geological Survey ) அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதானால் இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. USGS- இன் செய்தியறிக்கையின் படி, இந்தோனியா மற்றும் கிழக்கு தைமூர் பகுதியின் இடையே 32 மைல்கள் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு (The Indian Ocean Tsunami Warning and Mitigation System (IOTWMS)) அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைமூர் பகுதியில் அடிக்கடி சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் நிகழும் பகுதியாகும். கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.2 ரிக்டேர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2004 ஆம் ஆண்டு, சுமத்ராவின் கடலோர பகுதியில் 9.1 ரிக்டேர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதனால் 2.20 லட்சம் பேர் இறந்தனர். இதில் 1.70 லட்சம் பேர் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதியில் கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட கடும் பொருளாதார சிக்கலில் இருந்து இன்னும் மீளவில்லை. இதனால் 42 சதவீதத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்