முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பான நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


டிரம்ப் குற்றவாளி இல்லை


2024 குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் டிரம்ப் மீது, 2020 தேர்தலின் முடிவுகள் வந்தபின் அதனை ஏற்க மறுத்து, எண்ணிக்கையின் மீது சந்தேகம் எழுப்பி பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் பலர் வெள்ளை மாளிகையில் வன்முறையில் ஈடுபட அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்மித் கொண்டு வந்த 45 பக்க குற்றப்பத்திரிகையை வாசித்த மாஜிஸ்திரேட் நீதிபதி மோக்சிலா உபாத்யாயா, டிரம்ப் குற்றவாளி இல்லை என்று கூறினார்.



குற்றப்பத்திரிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள்


“2020 ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை தவறான கூற்றுகளைப் பயன்படுத்தி மாற்றியமைத்து சதி செய்ய முயன்றுள்ளார். அவருடைய நடவடிக்கைகள் அரசாங்கத்தின் செயல்பாட்டைத் தடுக்கின்றன,” என்று சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்மித் அலுவலகத்தின் குற்றச்சாட்டாக குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். "தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், டிரம்ப் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால், நவம்பர் 3, 2020 அன்று தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து, அடுத்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, தேர்தல் முடிவுகளில் மோசடி நடந்ததாகவும், அவரே உண்மையில் வெற்றி பெற்றதாகவும் பொய்களைப் பரப்பி வந்தார்," என்று குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டிருந்தது.


தொடர்புடைய செய்திகள்: Road Accident: வாகன ஓட்டிகளே உஷார்! செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய 1040 பேர் பலி - மத்திய அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்


ட்விட்டர் போல 'ட்ரூத்'


டிவிட்டரில் அப்போது இந்த தேர்தலில் உண்மையில் வெற்றி பெற்றது நான்தான் என்று டிரம்ப் குறிப்பிட, அதற்கு கீழே டிவிட்டர் நிறுவனம், 'தவறான செய்தி' என்ற டேகை இணைத்தது. அதன்பின்னர் டிவிட்டரில் இருந்து அவருடைய அக்கவுண்ட் சஸ்பென்ட் செய்யப்பட்டது. அதனால் தனக்கென ஒரு சமூக ஊடகத்தையே உருவாக்கினார் டிரம்ப். ட்ரூத் என்ற பெயர் கொண்ட அந்த சமூக ஊடகம் டிவிட்டர் போலவே செயல்பட்டது. டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவில், "ஊழல், மோசடி மற்றும் பொய்யான தேர்தல் முடிவுகள்" எனப் புகார் கூறினார். இவை அனைத்தும் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான அவரது முயற்சி என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.



அரசியல் எதிரியை துன்புறுத்தும் செயல்


ஆனால் இந்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளித்த பின்னர் காட்சிகள் மாறியுள்ளன. வழக்கின் சாட்சியாகத் தெரிந்த எவருடனும் சட்ட வாயிலாக தொடர்பு கொள்ளக் கூடாது என்பன உள்ளிட்ட மிகக் குறைந்த நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி விடுவிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், "இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம், ஒரு அரசியல் எதிரியை துன்புறுத்தும் செயல் ஆகும். இது ஒருபோதும் அமெரிக்காவில் நடக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.