எலான் மஸ்க்

டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தில் உரிமையாளர் எலான் மஸ்க் அன்மையில் உலகத்தின் நம்பர் 1 பணக்காரன் என்று அறிவிக்கப்பட்டார். 419 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரரான எலான் மஸ்க் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவில் டோனால்டு டிரம் வெற்றிக்கு பெரும் பணத்தை வாரி கொடுத்தார் எலான் மஸ்க். தற்போது அமெரிக்கா செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். மஸ்கின் பொதுவாழ்க்கை இப்படி செம பிஸியாக சென்றுகொண்டிருக்க அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் தங்கு தடையின்றி சென்றுகொண்டிருக்கிறது. இதுவரை ஐந்து பெண்களுடன் திருமணம் மற்றும் காதலில் இருந்து வந்த எலான் மஸ்கிற்கு அன்மையில் 13 ஆவது குழந்தை பிறந்துள்ளது. 

எலான் மஸ்க் குழந்தைகள்

எலான் மஸ்க் 2000 ஆம் ஆண்டு ஜஸ்டின் வில்சன் என்கிற எழுத்தாளரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆறு குழந்தைகள் பிறந்தது. இதில் மூத்த ஆண் குழந்தை 10 வயதில் உயிரிழந்தது. 8 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின் இந்த தம்பதி பிரிந்தார்கள். தங்கள் குழந்தைகளுக்கான பொறுப்புகளை இருவரும்  பகிர்ந்துகொள்கிறார்கள்.

2010 ஆம் ஆண்டு தலுலா ரைலி என்பவரை மஸ்க் திருமணம் செய்துகொண்டார். இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து மறுபடியும் திருமணம் செய்துகொண்டார்கள். பின் கடைசியாக 2016 ஆம் ஆண்டு மீண்டும் பிரிந்து அவரவர் வாழ்க்கை பாதையில் பயணித்து வருகிறார்கள். இருவருக்கு குழந்தைகள் இல்லை.

2018 ஆம் ஆண்டு கிரைம்ஸ் என்கிற இசைக்கலைஞர் ஒருவரை மஸ்க் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளார்கள். கிரைம்ஸ் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தபோது மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஷிவோவ் ஜிலிஸ் என்கிற பெண்ணோடு தொடர்பில் இருந்துள்ளார். அதே அதே சமயத்தில் இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இந்த தகவல் கிரைம்ஸ் உள்ளிட்ட அனைவரும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது . மஸ்க் மற்றும் கிரைம்ஸ் பிரிந்தபின் குழந்தைகளின் பொறுப்புகளை பகிர்ந்துகொண்டார்கள். 

தற்சமயம் மஸ்கின் 13 ஆவது குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் ஆஷ்லி என்பவர். மஸ்க் போலவே இவரும் டிரம்பின் தீவிர ஆதரவாளர். மஸ்கின் 13 ஆவது குழந்தைக்கு தாயாகியுள்ளதாக சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார் ஆஷ்லி. இந்த தகவலை எலான் மஸ்க் இன்னும் தன் சார்பாக உறுதிபடுத்தவில்லை.