உலகளவில் ஆறு பேரில் ஒருவர் குழந்தையின்மை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருவதால் அதிகரித்து வரும் குழந்தையின்மை குறைபாட்டுக்கு சத்தம் மிக்க, மாசுபட்ட நகரங்கள் காரணமாக இருக்குமோ என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.


டென்மார்க்கில் குழந்தையின்மை குறைபாட்டை ஆராய நாடு தழுவிய தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டின் நீண்டகால வெளிப்பாடு மற்றும் போக்குவரத்து இரைச்சலுக்கும் அதிகரித்து வரும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த காரணிகள் ஆண்களையும் பெண்களையும் வேறு வேறு விதமாக பாதிக்கிறது. 


போக்குவரத்து இரைச்சல், மாசுவால் ஏற்படும் விளைவுகள்:


போக்குவரத்து மாசுபாடு, சுற்றுச்சூழலில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மக்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குகின்றன. குறிப்பாக, புற்றுநோய், இதய நோய் ஏற்பட போக்குவரத்து மாசுபாடு காரணம் இருக்கலாம் என்பதற்கு பல ஆய்வுகள் சான்றாக இருக்கின்றன.


மாசுபட்ட காற்றில் இருந்து உள்ளிழுக்கப்படும் ரசாயனங்கள் ரத்தத்தின் வழியாக இனப்பெருக்கத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. அவை ஹார்மோன்களை சீர்குலைப்பதன் மூலமோ அல்லது முட்டை மற்றும் விந்தணுக்களுக்கு நேரடி சேதத்தை ஏற்படுத்துவதன் மூலமோ கருவுறுதலைக் குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.


உடல் ஆரோக்கியத்தில் போக்குவரத்து இரைச்சலின் விளைவுகள் குறைவாகவே உள்ளன. ஆனால் சில ஆராய்ச்சிகள், இது மன அழுத்த ஹார்மோன்களை பாதிக்கிறது. கருவுறுதலை பாதிக்கலாம் என கூறப்படுகிறது. 5,26,056 பேரில் 16,172 ஆண்கள் குழந்தையின்மை குறைபாட்டால் பாதிக்கப்பட்டது டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.


ஆண்கள், பெண்கள் மீது ஏற்படும் பாதிப்புகள்:


அதேபோல, 377,850 பெண்களில் 22,672 பேர் கருவுறாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். PM2.5 மாசு துகள் அளவை உள்ளிழுத்த ஆண்களுக்கு மலட்டுத்தன்மையின் ஆபத்து 24% அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


சுற்றுச்சூழல் வெளிப்பாடு உடனடி மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், ஆண்டுகளும் பெண்களும் வேறு வேறு விதமாக பாதிக்கப்படுகின்றனர். பருவமடைந்த பிறகு, ஆண்கள் தொடர்ந்து விந்தணுக்களை வெளியிடுகின்றனர். ஒரு நாளைக்கு 300 மில்லியன் விந்தணுக்களை வரை வெளியாகிறது. 


சுற்றுச்சூழல் பாதிப்பால் குறிப்பாக ஆபத்தான மாசு துகள் அளவை உள்ளிழுப்பதால் விந்தணு அளவும் தரமும் பாதிக்கப்படுகிறது.