காண்போரை ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகக் குறுகிய தூரத்திற்கான வணிக விமானப் பயணங்கள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


விமானப்போக்குவரத்து:


செல்ல வேண்டிய இடத்திற்கு விமான சேவை குறுகிய நேரத்திலேயே செல்ல முடியும் என்றாலும், அந்த சேவை சற்றே விலைமதிப்பு மிக்கது. இருந்தாலும், சொகுசாகவும், விரைவாகவும் பயணம் இருப்பதால் அந்த பயணம் தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆனால், விமானத்தில் ஏறியது கூட தெரியாமல் ஒரு சில நிமிடங்களில் எல்லாம், பயணம் நிறைவடைவதை எல்லாம் நினைத்து பார்க்க முடிகிறது. ஆனால், அதுபோன்ற விமான சேவைகள் இன்றளவும் உலகின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அதில் முதல் 5 இடங்களில் உள்ள விமான சேவைகள் மட்டும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


05. செயின்ட் மார்டென் - சபா:



சபா தீவு eன்பது கரீபியன் கடற்பகுதியில் உள்ள ஒரு டச்சு பிரதேசமாகும். அங்கிருந்து வெறும் 15 நிமிட விமான பயணத்தின் மூலம் செயின்ட் மார்டென் தீவை அடையலாம். இந்த இரு தீவுகளுக்கு இடையேயான தூரம் வெறும் 45 கிலோ மீட்டர் தான். படகிலும் இந்த இரு தீவுகளுக்கு இடையே பயணிக்க முடியும். இருப்பினும், அழகான கடல் காட்சிகளை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் பலரும் செயின்ட் மார்டென் - சபா இடையே விமான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


04. கன்னிமாரா மற்றும் இனிஸ் மோர்:


அயர்லாந்தின் கன்னிமோரா விமான நிலையத்தில் இருந்து, அந்நாட்டின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான இனிஸ் மோர் தீவிற்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயணம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். 8 பேர் பயணிக்கும் வசதி கொண்ட விமானங்கள் இந்த மார்கத்தில் இயக்கப்படுகின்றன. பயணிகள் ஒவ்வொருவரும் எடைபோட்ட பிறகு தான் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர். அந்த தீவில் பொதுமக்களை கவரும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அங்கிருந்து இனிஸ் ஓய்ர் மற்றும் இனிஸ் மெய்ன் போன்ற மற்ற தீவுகளுக்கு செல்வதற்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.


03. செயின்ட் மார்டென் - அங்குவிலா



செயின்ட் மார்டன் உலகின் மிகவும் பிரபலமான விமான நிலையங்களில் ஒன்றாக அறியப்படுகிறது, அதாவது இளவரசி ஜூலியானா சர்வதேச விமான நிலையம். காரணம் அப்பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றால் தலையில் இருந்து சற்றே சில உயரத்தில் விமானத்தில் பறப்பதை காணலாம். காரணம் செயின்ட் மார்டென் பகுதியிலிருந்து  சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ள, அங்குவிலா தீவிற்கு விமான சேவ வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயணம்  வெறும் 10 நி மிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


02. கர்பதோஸ் - கசோஸ்:


கர்பதோஸ் மற்றும் கசோஸ் என்பவை கிரீஸ் நாட்டைச் சேர்ந்த தீவுகள் ஆகும். இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையேயான விமான சேவையை ஒலிம்பிக் ஏர் ஃப்லைட்ஸ் எனும் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த தீவுகளுக்கு இடையேயான சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை படகு மூலமாகவும் கடக்க முடியும். ஆனால், அதற்கு ஒரு மணி நேரத்திகும் மேலாக நேரம் ஆகும். இதன் காரணமாகவே பொதுமக்கள் விமான சேவையை நாடுகின்றனர். இதன் மூலம் கர்பதோஸிலிருந்து கசோஸ் தீவிற்கு வெறும் 5 நிமிடங்களில் சென்றடைய முடியும்.


01. வெஸ்ட்ரே - பாபா வெஸ்ட்ரே:


மிகக்குறைந்த நேர விமான சேவையில் முதலிடம் பிடித்து இருப்பது வெஸ்ட்ரே - பாபா வெஸ்ட்ரே தீவுகளுக்கு இடையேயான பயணம் தான். ஸ்காட்லாந்தை சேர்ந்த இந்த இரண்டு தீவுகளுக்கு இடையேயான பயண தூரம் என்பது வெறும் 2 நிமிடங்களுக்கும் குறைவு தான். வானிலை உட்பட அனைத்து சூழல்களும் சாதகமாக இருந்தால் வெறும் 47 நொடிகளில் இந்த விமான பயணம் நிறைவடைந்து விடும். இந்த இரண்டு தீவுகளுக்கு இடையேயான படகு பயணம், 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் விமான பயணத்தை நாடுகின்றனர்.


காரணம் என்ன?


10 நிமிடங்களுக்கு எல்லாம் ஏன் விமான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வி பலரில் எழலாம். ஆனால், மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் பெரும்பாலானவை கடலுக்கு மத்தியில் இருக்கும் தீவுகள் தான். அங்கு 100-க்கும் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். அவர்களுக்காக கடலுக்கு மத்தியில் பல கோடி ரூபாயை செலவழித்து பாலங்களை கட்டுவது என்பது பெரிய பலன் ஒன்றும் அளிக்கப்போவதில்லை. இதன் காரணமாகவே இன்றளவும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு விமான சேவையே முதன்மை போக்குவரத்தாக உள்ளது.