வைரல் முகம்..
சோஷியல் மீடியா பயன்படுத்தும் அனைவருக்கும் சில முகங்கள் பரிட்சையமாக இருக்கும். நாம் பயன்படுத்தும் வாட்ஸ,பேஸ்புக் போன்ற தளங்களில் மீம்ஸ்கள்,வீடியோமீம்ஸ்,ஜிஃப் மூலமே பல வைரல் ரியாக்ஷன்கள் டெம்பிளேட்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன.
உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு குழந்தைகளின் ரியாக்ஷன், குழந்தைகளில் ஜிஃப்கள் வாட்ஸ் அப் ஸ்டிக்கர்களாகவும், கலாய்க்கும் ஜிஃப்களாகவும் உலவிக்கொண்டு இருக்கிறது. அப்படியான ஒரு வைரல் ஜிஃப் கைலியாவின் சிரிப்பு.குழந்தைகள் பங்கேற்கும் Toddlers & Tiaras என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கைலியா அந்நிகழ்ச்சியில் பல க்யூட் ரியாக்ஷன்களை செய்தார்.
அவையெல்லாம் தற்போது இணைய உலகில் பலராலும் பேவரைட் ஜிஃப்களாக பயன்படுத்தப்படுகிறது. டெம்பிளேட்டில் கைலியா குழந்தை என்றாலும் அவர் தற்போது வளர்ந்த இளம்பெண்ணாகவே இருந்தார். 16 வயதான கைலியா இப்போதும் வைரலாகியுள்ளார். இந்த முறை மரண செய்தியை தாங்கி வந்திருக்கிறது கைலியாவின் செய்தி.
தற்கொலை..
அமெரிக்காவின் வாஷிங்டனில் வசித்துவந்த கைலியா, அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்துள்ள அவரது அம்மா, '' என்னிடம் எந்த வார்த்தைகளுமே இல்லை. என் அழகான மகள் மறைந்துவிட்டாள். அவளது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள். என்றுமே அவள் எங்களுடனே இருப்பாள்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கைலியாவின் தற்கொலை ஏன் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.