ஆப்ரிக்காவில் உள்ள கென்யா நாட்டில் கிறுஸ்துவ பிரிவைச் சேர்ந்த சிலர் ஏசு கிறுஸ்துவைக் காண்பதற்காகப் பல நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்துள்ளனர்.
கென்யா (Kenya), அதிகாரபூர்வமாக கென்யக் குடியரசு (Republic of Kenya), என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். நைரோபி இதன் இதன் தலைநகரும் பெரிய நகரமும் ஆகும். நடுநிலக் கோட்டில் அமைந்துள்ள கென்யாவின் எல்லைகளாக, தெற்கு மற்றும் தென்மேற்கே தன்சானியா, மேற்கே உகாண்டா, வட-மேற்கே தெற்கு சூடான், வடக்கே எத்தியோப்பியா, வட-கிழக்கே சோமாலியா ஆகிய நாடுகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 581,309 சதுரகிமீ ஆகும்
இந்நிலையில் கென்யா நாட்டில் கிறுஸ்துவ பிரிவைச் சேர்ந்த சிலர் ஏசு கிறுஸ்துவைக் காண்பதற்காகப் பல நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்துள்ளனர். கென்யாவின் மாலிண்டி என்ற குக்கிராமத்திலிருந்து 47 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த வாரம் அப்பகுதியே துர்நாற்றம் வீசியதையடுத்து போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி சடலங்களைக் கைப்பற்றினர்.
முன்னதாக குட் நியூஸ் இண்டர்நேஷனல் சர்ச் என்ற அந்த தேவாலயத்தைச் சேர்ந்த 15 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். இது குறித்து தகவலறிந்து அங்கு மீட்புக் குழு சென்று அவர்களை மீட்டனர். 4 பேர் பட்டினியில் உயிர் துறந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை நடைபெறுகிறது.
காவல்துறையினர் கென்யா முழுவதும் முழுவீச்சில் இதுபோன்ற அபத்தங்களைப் பரப்பும் மதகுருக்களை தேடி வருகின்றனர். குறிப்பாக மேக்கன்சி தெங்கே என்ற தேவாலய தலைவரைத் தேடி வருகின்றனர். அவர் தான் மக்கள் பட்டினி கிடந்து ஏசுவைக் காண வேண்டும் என்று தெரிவித்து ஊக்குவித்து வருகிறார்.
கென்யாவில் பல ஆண்டு காலமாகவே இது போன்ற சில சில குழுக்கள் இறைவனைக் காண கூட்டு பிராத்தனை, உண்ணாவிரதம், தற்கொலை என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
மேக்கன்ஸியின் வலை..
கென்யா நாட்டின் கிலிஃபி மாகாணத்தில் உள்ளது ஷக்கஹோலா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு சர்ச்சில் பாதிரியாராக பால் மேக்கன்ஸி உள்ளார். இவர் அந்த சர்ச்சுக்கு வரும் நபர்களில் யாருக்கு பக்தி அதிகம் இருக்கிறது, யார் கடவுளை பார்க்கத் துடிக்கிறார்கள் என்பதை நாசூக்காக அறிந்து கொள்வாராம். பிறகு அவர்களை மட்டும் அழைத்து ஒரு சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்படுமாம். அந்த கூட்டத்தொடரில் இயேசு கிறிஸ்துவை நேரில் சந்திப்பதற்கான வழி, சொர்க்கத்தை அடைய செய்ய வேண்டுவது என்ன என்பது சொல்லப்படுவது வழக்கமாம். அந்த பாதிரியார் அவர்களிடம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தால் இயேசு கிறிஸ்துவை பார்க்கலாம் எனச் சொல்ல அதை பின்பற்றி இன்றுவரை பலரும் உயிரிழந்துள்ளனர். இது குறித்து சர்வதேச அமைப்புகள் பலவும் கென்ய அரசுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.