அன்றாடச் செலவு நெருக்கடிகள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. பல தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது குறித்து குற்றசாட்டு வைத்துள்ளார்கள்.இந்த பிரச்னை குறித்த பரப்புரைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .இருப்பினும், ஒரு நபர் மட்டும் இந்தச் சிக்கலை தீர்க்க புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். சைமன் என்ற பெயர் கொண்ட அந்த நபர் தனது பணியிடக் க்யூபிக்களுக்கு மாறிய பிறகு, அவரது நிறுவனம் வாடகைக்கு போதுமான பணம் தரவில்லை என்று கூறி தற்போது பெரும் வைரலாகிவிட்டார். TikTok-இல் வெளியிடப்பட்ட ஒரு வைரல் வீடியோவில், சைமன் தனது அலுவலக அறைக்குள் தனது உடைமைகளை வைப்பதைக் காணலாம். அலுவலகத்தில் தனது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தனக்கான பிரத்யேக ஃபாலோயர்களை அவர் உருவாக்கியுள்ளார்.
" நான் எனது துணிகளைப் பல பைகளில் கொண்டு வந்து இங்கே வைத்துள்ளேன், எனது வாடகையைத் தருவதற்கான சம்பளத்தை அவர்கள் தரவில்லை என்பதால் அதனை எதிர்க்கும் விதமாக நான் என் அலுவலகத்திலேயே வாழப் போகிறேன், என்னை யாரும் கண்டுபிடிக்கக் கூடாது எவ்வளவு நாள் இதில் தாக்குப் பிடிக்க முடியும் எனப் பார்க்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
மற்றொரு வீடியோவில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தனது சக பணியாளர்களில் பெரும்பாலோர் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் என்றும் அதனால் அலுவலகத்தில் அமைதியாக வாழ முடிகிறது என்றும் சைமன் கூறியுள்ளார்.
அவர் தனது ஃபாலோயர்களுக்கு தனது க்யூபிகிளைச் சுற்றிக் காண்பித்தார்.மேலும் தனது உணவு உடைமைகளை எவ்வாறு சேமித்து வைக்கிறார் என்பதையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
செக்யூரிட்டியிடம் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று ஒரு ஃபாலோயர் கேட்டதற்கு, "பெரும்பாலான கார்ப்பரேட் அலுவலகங்களில் க்யூபிகல் பகுதியில் கேமராக்கள் இல்லை" என்று சைமன் பதிலளித்தார். மற்றொரு அப்டேட்டில், சைமன் அலுவலக கட்டிடத்திற்குள் இரண்டு ஆண்கள் அறை உள்ளது, மேலும் இலவசமாகப் பயன்படுத்த துண்டுகளும் உள்ளது எனக் கூறியுள்ளார்.
ஆனால் அவர் அலுவலகத்தில் தங்கியது அதிக நாள் நீடிக்கவில்லை. அவர் 'நான்காம் நாளில் தனது அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை உறுதிப்படுத்தினார், மேலும் அலுவலகத்தின் மனிதவள ஊழியர் ஒருவர் சமூக ஊடகங்களில் இருந்து அனைத்து கிளிப்களையும் அகற்றும்படி அவரிடம் கேட்டுக் கொண்டதாகவும். வெளியேற்றத்திற்குப் பிறகு, சைமன் நிறுவனத்துடனான தனது உறவு 'முடிவடைய வாய்ப்புள்ளது' என்றும் கூறியுள்ளார். இருப்பினும் அவரது வேலையின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை.
இந்த வேலைப் போக வாய்ப்புள்ளது அல்லது நல்லதும் நடக்கலாம் எதுவாக இருந்தாலும் நிறுவனத்தலைவரைப் பொருத்தது எனக் கூறியுள்ளார் சைமன்.