பரபரப்பான வாழ்க்கையில் மாறிவிட்ட உணவு பழக்கம் காரணமாக நாம் பல்வேறு உடல் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. அப்படி இன்றைக்கு பல பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளுள் ஒன்றாகிவிட்டது குழந்தையின்மை.குழந்தையின்மை பிரச்சனைக்கு நவீன மருத்துவம் ஒரு பக்கம் கைக்கொடுத்தாலும் அதற்கு ஆகும் செலவினங்கள் சாமானியர்களால் முடியாத காரியம் . ஆனால் லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டிலேயே செயற்கை கருவூட்டல் கருவை கண்டுபிடித்து அதன் மூலம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.


செயற்கை கருவூட்டல் கருவி :


தெற்கு லண்டனைச் சேர்ந்த 24 வயது பெண் Bailey Ennis. இவர் உறவில் ஈடுபாடில்லாதவர். ஆனாலும் தனக்கு குழந்தை வேண்டும் என நினைத்திருக்கிறார். அதனால் ஆன்லைனில் பழக்கமான ஒரு டோனர் மூலம் குழந்தையை பெற முடிவு செய்திருக்கிறார். இதற்காக  இந்திய ரூபாய் மதிப்பில் 4 ஆயிரம் ரூபாய் செலவு செய்து DIY  மூலம் Artificial insemination அதாவது செயற்கை கருவூட்டல் கருவி ஒன்றை தயார் செய்திருக்கிறார். டோனர் உதவியுடன்  தானாகவே கருவூட்டல் செய்திருக்கிறார். முதல் முயற்சியிலேயே அவர் தாய்மை நிலையை அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தான் கண்டுபிடித்த செயற்கை கருவூட்டல் கருவி மூலம் அக்டோபர் 2021 ஆம் ஆண்டு கர்பத்தை உறுதி செய்தவர் , கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி 2.32 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான  அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.


Artificial insemination க்கு எவ்வளவு செலவாகும் ?


இதை ஏன் சாதனை என்கிறோம் என்றால் , பொதுவாக  Artificial insemination  செய்ய வேண்டும் என்றால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் 80 ஆயிரம் வரையில் செலவாகும் . நம்மூரில் செலவு இதற்கு மேலாகத்தான் இருக்கும். செயற்கை கருவூட்டல் மூலம் கர்ப்பம் தரிப்பதற்கான வெற்றி விகிதம்  கூட 5 முதல் 30 சதவீதம் வரைதான் என்கின்றனர். அதோடு இந்த செயல்முறையில் பலருக்கு ஸ்பாட்டிங் , தொற்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தரிப்பு கூட நடக்கலாம். எனவே இது மருத்துவரின் கூடுதல் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டிய ஒன்று. இதனை 24 வயது பெண் , வீட்டிலேயே செய்து , ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுத்திருப்பதுதான் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. 




கண்டுபிடிப்பு குறித்து பெய்லி :


இது குறித்து Bailey Ennis கூறுகையில் “  LGBTQ ஜோடிகளுக்கு டோனராக இருந்த , ஆரோக்கியமான மருத்துவ ரெக்கார்ட் கொண்ட ஒரு நபரை நான் கண்டுபிடித்தேன். அவரை காஃபி ஷாப்பிற்கு வரவழைத்து இருவரும் பேசினோம். அவரிடம் எனது ஐடியாவை கூறினேன். அவர் எனக்கு டோனராக இருக்க சம்மதித்தார். மேலும் அவரின் உதவியுடன் நான் கண்டுபிடித்த கருவி மூலம்  Artificial insemination  செய்துக்கொண்டேன் . பெரிதாக ஒன்றுமில்லை sterile  கப்ஸ் , சிரெஞ்ச் , ஓவலேஷன் சோதனைகள் அவ்வளவுதான்“ என்றார்.