காளை அடக்கும் விளையாட்டில் தன்னை அடக்க வந்த இளைஞரை காளை ஒன்று அடித்து துவைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவை பிரிட்டிஷ் காமெடியன் ரிக்கி கேர்வைஸ் பகிர்ந்துள்ளார். இவர் பிரபல ஹாலிவுட் படம் நைட் அட் தி மியூசியம் படத்தின் மூன்றா பாகத்தின் ஹீரோ. இவர் பகிர்ந்த அந்த வீடியோவின் கீழ் ஏராளமானோர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.


அந்த வீடியோவைப் பார்த்துவிடுங்கள்:






என்ன வீடியோ பார்த்தாகிவிட்டது. ஐய்யோ பாவம் என்று தான் சொல்லத்தோணுது. அந்த வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் சிலர் அந்த இளைஞருக்காக இரக்கப்பட்டுப் பேசியுள்ளனர். இன்னும் சிலர் தன்னைவிட உருவத்தில் வலிமையில் சக்தி வாய்ந்தவருடன் மோதினால் இதுதான் நேரும் என்று கூறியுள்ளனர்.


இன்னும் சிலர் விலங்குகளின் வேதனையைப் புரிந்து கொள்ளுங்கள். விலங்குகளைத் துன்புறுத்த வேண்டாம் என்று கூறியுள்ளனர்.


ஸ்பெயின் காளைச் சண்டை:


ஸ்பெயின் நாட்டு காளை சண்டை விளையாட்டுக்கு மேட்டாடார் (Matador) என்று பெயர். இது ஸ்பெயின் நாட்டில் பல காலமாக விளையாடப்பட்டு வரும் ஒரு விளையாட்டு.


இதற்கென பிரத்யேக மைதான இருக்கிறது. இதில் பங்குபெறும் வீரர்களுக்கு பயிற்சியளிக்கவும் பயிற்சிப் பள்ளிகள் இருக்கின்றன. ஆண்டுக்கு இருமுறை இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. 


காளைச் சண்டைக்கென இருக்கும் பிரம்மாண்ட மைதானத்தில் முதலில் ஒரு வீரர் அதை நேரூக்கு நேர் சந்தித்து முட்ஞ வரும் போது இலாகவமாக விலகி விடுவார்கள். பிறகு வண்ண வண்ண ஆடைகள் அணிந்த ஆண்கள் முதலில் உள்ளே சென்று அந்த காளையை சுற்றி சுற்றி வர வைப்பார்கள். அதற்கு அவர்கள் சிவப்பு நிற  துணியை உபயோகித்து அந்த காளை முன்னாடி காட்டுவார்கள். அது அந்த துணியின் மேல் முட்ட வரும்போது அதை விலக்கி விடுவார்கள்.


இவ்வாறாக அந்த காளையை களைப்படையச் செய்வார்கள். அப்போது சில வீரர்கள் குதிரை மேல் அமர்ந்து வந்து அதன் முதுகில் கத்தியால் குத்துவார்கள்.  அதனால் அந்த காளையின் வெறி மேலும் அதிகமாகும். இந்த விளையாட்டில் விளையாடுபவரகள் கையில் சிகப்பு துணியுடனும் அம்புடனும் சீண்டிக் கொண்டே இருப்பார்கள். அதன் முதுகில் கொண்டையை மேல் அவர்கள் குத்தி அதை மேலும் காயப்படுத்துவார்கள். இறுதியாக ஒரு முக்கிய விளையாட்டுக்காரர் அதன் கொண்டை மூலம் ஒரு பெரிய அம்பு அல்லது கத்தியை செருகி அதை கீழே விழச்செய்து விடுவார். சில நேரங்களில் அந்த வெறியில் உள்ள காளை அந்த விளையாட்டு விளையாடுபவர்களை முட்டி கீழே தள்ளி மிதித்து துவம்சம் செய்து விடும். மரணமும் நிகழும். இந்த விளையாட்டிற்கு இப்போது உள்ளூர் மக்களே தடை கோருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.