பிரபல ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்திய பணக்காரர் கௌதம் அதானி உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.


உலகின் மூன்றாவது பெரும்பணக்காரர் :


இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபராக அறியப்படுபவர் கௌதம் அதானி. இவருக்கு சொந்தமாக அதானி குழுமங்கள் , அறக்கட்டளைகள் செயல்பட்டு வருகின்றன. அதானி  நிறுவனங்கள் வேளாண்மை, பாதுகாப்புத் துறை, துறைமுகம், எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலக பணக்காரர் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த அதானி . தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இது குறித்த அறிவிப்பை ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் வெளியிட்டுள்ளது.  அதன்படி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் இடம்பிடித்திருப்பது இதுவே முதல் முறை என்கிறது.இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் சீனாவைச் சேர்ந்த அலிபாபா குழுமத்தின் ஜாக் மா போன்றவர்கள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட , கௌதம் அதானியின் சொத்து மதிப்பை எட்டவில்லை என்கிறது ப்ளூம்பெர்க்.




பெர்னார்ட் அர்னால்ட்டை வீழ்த்திய அதானி :


முன்னதாக மூன்றாவது இடத்தில் இருந்த LVMH என அழைக்கப்படும் LVMH Moet Hennessy Louis Vuitton இன் இணை நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட்டை , கௌதம் அதானி வீழ்த்தியிருக்கிறார்.அவர் தற்போது $137 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளை வைத்துள்ளார்.  டெல்சா தலைவர் மஸ்க் 251 பில்லியன் டாலர் சொத்து  மதிப்புடன் முதல் இடத்திலும் ,  அமேசான் நிறுவனர் மற்றும் CEO  ஜெஃப் பெசோஸ் $153 பில்லியன் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 




கடன் சுமை அதிகரிக்கிறதா ?


கௌதம் அதானி அதானி குழுமத்தின்  இணை இயக்குநர் . துறைமுகம் மற்றும் நிலக்கரி விற்பனையில் முன்னணியில் இருந்து வரும் அதானி குழு கால் பதிக்காத இடமே இல்லை எனலாம். . மார்ச் 31, 2021 வரையிலான ஆண்டில் அதானி எண்டர்பிரைசஸ் $5.3 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாக ப்ளூம்பெர் அறிக்கை கூறுகிறது.கடந்த வாரம், இந்தியாவின் முக்கிய செய்தி நெட்வொர்க்குகளில் ஒன்றான என்டிடிவியில் 29 சதவீத பங்குகளை அதானி நிறுவனங்கள் வாங்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இது SEBI இன் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது என கூறியது என்.டி.டிவி ஆனால் குழுமம் அதனை மறுத்துவிட்டது. இது ஒரு புறம் இருக்க அதானி குழுமம் அதிக அளவிலான தொழில்களில் கால் பதிக்க இருப்பதால் , அது விரைவில் கடன் சுமையில் சிக்கக்கூடும் என ஃபிட்ச் குழும யூனிட் கிரெடிட்சைட்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.